பக்கம்:திருமாவளவன்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் வரலாறு 95

லாற்றை அறியப் பெரிதும் முயன்று:முடியாமற்போகவே' அவர்கள் பெயரையாவது அறிந்து அறிவிக்க முயன்றுள் ளனர். அம்முயற்சியில் அவர்கள் ஒர் அளவு வெற்றியும் பெற்றனர். புலவர் ஒருவருடைய ஊரும், அவர் மேற் கொண்டிருந்த தொழிலும், அவர் இயற்பெயரும் தெரிங் தால், உறையூர் மருத்துவன் தாமோதரனுர், மதுாைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனர், எனவும் ; ஊரும், தொழிலும் அறிந்து அவர்தம் இயற்பெயர் அறியமாட்டா தாரை, அரிசில்கிழார், உறையூர் இளம்பொன் வாணிகளுர், உறையூர் முதுகூத்தனர், மதுரைக் கணக்காயனர், வெண் னிக்குயத்தியார் எனவும், புலவர்தம் ஊர்மட்டும் அறிந்து, அவர்தம் தொழிலோ, இயற்பெயரோ அறியமாட்டா தாரைக் கல்லாடனர், கழாத்தலையார், இடைக்காடனர் எனவும் ; ஊரும், பெயரும் அறிந்ததோடு, அவர் தம் தந்தை பெயரும் அறியும் நிலையில் உள்ளாரை மதுர்ை அளக்கர் ஞாழலார் மகளுர் மள்ளனர், மதுரைக் கணக் காயனர் மகனர் நக்கீரர் எனவும், அப்புலவர்தம் வரலாற்

றைத் தாம் அறிந்த அளவில் அறிவித்தனர்.

அவ்வளவோடு கில்லாமல், புலவர்தம் ஊரோ, தொழிலோ, இயற்பெயரோ அறியமாட்டாமல் இருந் தாரையும், அவர் இயற்றிய பாக்களைப் பயின்று அப்பாக் களில் காணப்பெறும், அரிய நயம் செறிந்த சொற்ருெடர், இனிய உவமைகள் ஆக இவற்றைக்கொண்டு முறையே தொடித்தலே விழுத்தண்டினர், கூகைக்கோழியார்,' எனவும், தேய்புரிபழங்கயிற்றஞர், ஒசேர்உழவர்' என வும் பெயரிட்டு வழங்கி அவரை அறிவிப்பாராயினர்.

1. дав 243. 2. , : 364. - 3. கற்றிணை: 284, 4. குறுக்த்ொகை :131.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/107&oldid=578881" இலிருந்து மீள்விக்கப்பட்டது