பக்கம்:திருமாவளவன்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 திருமாவளவன்

அப்புலவர் பலரும் தமிழ்ப் பேர் அரசர்களாலும், குறுநில மன்னர்களாலும், பிற கொடைவள்ளல்களாலும் பெரிதும் பாராட்டப்பெற்று ஆதரிக்கப்பட்டு வந்தனர். அவர்களுள் பலர், கரிகாற் பெருவளத்தான் காலத்தும், அவனுக்கு முன்னும் பின்னுமாக ஒரு நூற்ருண்டுக்குள் வாழ்ந்தவரே எனினும், அவர்கள் அனைவர் வரலாற்றையும் அறிவிப்பது என முயன்ருல், அது தனியானதொரு பெரு அநூலாய் முடியுமாதலின், அவ்வாறு செய்யாது, கரிகாற். பெருவளத்தானக் கண்டு, பாராட்டிய புலவர் சிலர்தம் வரலாற்றைமட்டும் ஈண்டுக் குறிப்பிடல் தகும். அவரா வார், பாணர், கருங்குழலாதனர், வெண்ணிக்குயத்தியார், மாமூலனர், முடத்தாமக்கண்ணியார், கடியலூர் உருத்திரங் கண்ணனர் முதலியோராவர்.

1. பரணர்

பாணர், நக்கீரரைத் தலைவராகக்கொண்ட சங்கப்புல வர் நாற்பத்தெண்மருள் ஒருவர் எனவும், அப்புலவர்கள், பிரமன் சாபத்தால், அவன் மனைவி காமகளின் கூருகிய எழுத்துக்களின் பிறப்பு எனவும், அவர்கள் தங்கள் தகுதிக் கேற்ப இருக்கத்தக்க இடம் வேண்ட, ஆலவாய்ப் பெரு மான், ஒருவர் இருக்கத்தக்க பலகை ஒன்றனைத் தந்து, இது புலவர் தகுதிக்கேற்ப வளர்ந்து, அனைவர்க்கும் இட மளிக்கும் என்று கூறியளித்தான் எனவும், அப்புலவர் களும் வரிசையாக, நக்கீரர், கபிலர், பாணர் என்ற முறை யில் அதில் ஏறி இருந்தனர் எனவும், இறைவனும் ஒரு புலவனுய் அவருடன் கூடி, அவர்களுக்கு இடையே தோன்றும் மாறுபாட்டைப் போக்குவதும், அவர்கள் ஐயப்பாட்டின நீக்குவதும், அவர்களுக்கு நல்லறிவு கொளுத்துவதும் ஆகிய செயல்களைச் செய்து வந்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/108&oldid=578882" இலிருந்து மீள்விக்கப்பட்டது