பக்கம்:திருமாவளவன்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் வரலாறு 97.

எனவும் புராணங்கள் கூறுகின்றன. ஆளுல், அப்புராணங் கள் மேற்படி வரலாற்றைக் கூறுவதில் ஒன்ருேடொன்று பெரிதும் மாறுபட்டு நிற்பதாலும், தம் அறிவிற்கும் ஆற்றலுக்கும் மிக்க ஒரு செயலை வேறு ஒருவர் தன் முயற்சியால் செய்து முடித்தால், அவ்வாறு செய்தவர் "ஆண்டவன் அருளைப் பெற்றவர்; அவன் துணையால் அதைச் செய்து முடித்தார்,” என்று கூறி, அவ்வாறு செய்து முடித்தார்தம் அறிவிற்கும் ஆற்றலுக்கும் மதிப்புத்தர மறுத்துவிடுவதைப் பின்வந்தோர் வழக்கமாக ஆக்கிக் கொண்டமையாலும், அப்புராணங்கள் கூறும் வரலாற் றிற்கு, அப்புலவர்கள் இயற்றிய பாக்கள் ஒன்றிலும் சிறி தேனும் சான்று கிடைக்காமையானும், அப்புராணங்கள் அளிக்கும் வரலாற்றை உண்மையென மேற்கொள்ளாது, அப்புலவர்கள் பாடிய பாக்களைத் துணையாகக்கொண்டு அவர்கள் வரலாற்றைக் கூடுமானவரை அறிய முயல்வதே அறிவுடையோர் செயலாம். -

  • புலவர் பாடும் புகழ்உடையோர் விசும்பில், வலவன் எவா வான ஆர்தி எய்துப' என்பதை நம்பியவர் நம் தமிழர். ' புலவர் பாடாது வரைக ’ எனப் புலவர் பாடாமை தமக்கு இழிவு என்று கொண்டனர், நம் தமிழர். அறிவில்மிக்க ஒளவையார், தாம்பாடிய ஒன்றி ேைலயே அதிகப் புகழ் ஓங்கி இருப்பவும், அவன் புகழ் மிக்கோன் என்ற கருத்துத் தோன்ற, “ இன்றும் பரணன் பாடினன் மற்கொல் ’’ எனப் பானால் பாடப் பெறுதல் அரிய செயல் என்று கூறுவதன்மூலம், பரணர் புகழ்ைப் பாராட்டியுள்ளார். “ புலம்மிக் கவரைப் புலமை தெரிதல், புலமிக் கவர்க்கே புலம்ை” என்ற பொருளுாைக் கேற்ப, புலவரால் பாடப்பெற்ற புலமைமிக்க பரணர் அவர்கள் வரலாறு நம்மால் அறிய இயலாமல் இருப்பது வருக்கத்

தி.-7 - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/109&oldid=578883" இலிருந்து மீள்விக்கப்பட்டது