பக்கம்:திருமாவளவன்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 திருமாவளவன்

தக்கதே ஆகும். அவர் பிறந்த ஊர், அவரைப் பெற்ருேர், அவர் இளமைக்கால வாழ்வு, அவர் அறிவுபெற்ற முறை, அவர் மேற்கொண்டிருந்த தொழில், அவர் மனைவிமக்கள், அவர் இறுதிக்காலம் ஆக இவற்றுள் எதைப்பற்றியும் ஒன்றும் அறிதற்கு இடன் இல்லை.

பாணர், யாதும் ஊரே யாவரும் கேளிர்,” என்ற பெருநோக்குடையர் ஆதலின், தான்வாழும் இடம் என ஒன்றைத் தனக்கென வகுத்துக்கொள்ளாது, தமிழ்நாட் டின் பல பகுதியினும் சென்று, வாழ்ந்து வந்தனராவர். இவர், தமிழகமெங்கும் சுற்றி அறிந்தவர் என்பது, இவர் சேரவேந்தரையும், சோழ அரசரையும், குறுகில மன்னர்க ளாய கொடை வள்ளல்கள் பலரையும் நேரில்கண்டு பாடி யிருப்பதாலும், தமிழ்நாட்டின் பல பகுதியினும் உள்ள மலைகள், ஆறுகள், ஊர்கள் ஆகிய இவைகள் மிகவும் விரிவா கவும், விளக்கமாகவும் இவரால் கூறப்பட்டுள்ளன. ஆதலா லும், ஆங்காங்கு நடைபெற்ற போர்க்கள நிகழ்ச்சிகளும், பிறவும் இவர் பாக்களில் பரக்கக் கூறப்பட்டுள்ளமையா அம், மழைபெயல் மாறிய கழைதிரங் கத்தம் ஒன்றிரண் டல, பல கழிந்து, திண்டேர் வசையில் நெடுந்தகை காண்குவத் திகினே” என அவரே கூறுதலாலும் அறியப் படும். . . .

பரணர், பேர்.அரசர்கள் தம்முட் பகைகொண்டு பொருது அழிவதையும், அவ்வரசர்தம் மாறுபாட்டால், அவ்விருவர் நாடுகளும் அழிவுக்குள்ளாவதையும் காணப் பொருத இளகிய நெஞ்சுடையவர் என்பது, சோமான் குடக்கோ நெடுஞ் சேரலாதனும், சோழன் வேற்பஃறடக் - கைப் பெருவிறற் கிள்ளியும் போர்ப்புறத்துப் பொருது

i. பதிற்றுப்பத்து 41.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/110&oldid=578884" இலிருந்து மீள்விக்கப்பட்டது