பக்கம்:திருமாவளவன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 3

எனவும் பழைய வரலாறுகள் கூறுவதாகக் கூறுவர் பெரியார் கால்டுவெல் அவர்கள்.”

இங்ங்னம் பழமையும், பெருமையும் பெற்று விளங் கிய சேர, சோழ, பாண்டியருள் நடுவண் உள்ளவரே திருமாவளவனின் முன்னேராவர். இச்சோழ அரசர்கள், கிள்ளி, வளவன், செம்பியன் என்ற பிற சொற்களாலும் அழைக்கப்பெறுவர்; இப்பெயர்களுள், கிள்ளி என்பது தோண்டுதல் என்று பொருள்படும் கிள்' (உ-ம். கிண்டி ன்ை) என்ற சொல்லடியாகப் பிறந்ததாகக் கூறுவர் சிலர் ; வளவன் என்பது, ' காடு கொன்று நாடாக்கிக், குளம் தொட்டு வளம்பெருக்கி 'யோர். அல்லது வளம் மிக்க நாட்டை ஆள்வோர் என்ற பொருளில் வழங்குவ தாகும் ; செம்பியன் என்பது தன்பால் அடைக்கலம் புகுந்த புருவின் பொருட்டுத் துலே புக்க சிபி மன்னன் மரபினர் என்ற பொருளில் வழங்குவதாகும்.

சோழ அரசின் தோற்றமும், தொன்மையும் எவ்வாறு அறியக்கூடாதனவாக உள்ளனவோ, அவ்வாறே அவர் பெயரின் தோற்றக் காரணமும் அறியக்கூடாததாகவே உளது. ஆரியர்க்குமுன் தென்னுட்டில் வாழ்ந்த கருப்பு மனிதர் என்ற பொருளில் வழங்கும். கால ' (Kala) அல்லது கோல” (Kola) என்ற வடமொழிச் சொற்களி னின்று வந்தது எனச் சிலரும், சோளம் (Millet) விளை யும் நாடு சோள நாடு '; அது சோழநாடு ஆயிற்று எனப் பிறரும், திருடன் என்ற பொருளில் வழங்கும் சோன்' (Cora) என்ற சொல்லிலிருந்து வந்தது என வேறு சிலரும் கூறுவர். அதன் தோற்றம் எதுவாயினும், சோழ’

Ti. 57వ@పెన్హౌస్ ໑.ຄ.ທ ທໍ່ பக். 14.

2, 3. K. A. நீலகண்ட சாஸ்திரியார் சோழர் பக். 25, 24,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/15&oldid=578789" இலிருந்து மீள்விக்கப்பட்டது