பக்கம்:திருமாவளவன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 திருமாவளவன்

என்ற சொல், அந்நாட்டையும், அங்காட்டில் வாழ்ந்த மக்க ளேயும் குறிப்பதாக மிகப் பழைய காலத்திலிருந்தே வழங் கப்பட்டுள்ளது என்பது தெளிவு.

செந்தமிழ் வளர்த்தவர் என்ற சிறப்பு பாண்டியர்க்கே உரியது என்ற பழைய வழக்குளதெனினும், பாடினேர், பாடப்பட்டோர் வரிசையில் பல சோழ மன்னர்களும் இடம் பெற்றுள்ளனர். ஆதலாலும், சோழர் தலைநகருள் மிகப் பழையதாகிய உறையூர், புலவர்பலர் தோன்றித் தொழிலாற்றிய இடமாக இருத்தலாலும், தமிழ்வளர்த்த பெருமை, எனச் சேர, பாண்டியரைப்போலவே, சோழர்க் கும் உரித்து என்பது தெளிவாம்.

வடவேங்கடம் தென்குமரிகட்கு இடைப்பட்ட தமி ழகம், தென்பாண்டி காடு, குட்ட நாடு, குடகு நாடு, கற்கா நாடு, வேணுடு, பூழி நாடு, பன்றி நாடு, அருவா நாடு, அருவாவடதலை நாடு, சீத நாடு, மலை நாடு, புனல் நாடு எனச் செந்தமிழ் கிலம்சேர் பன்னிரு கிலமாக வகுக்கப்பட்டிருப் பவும், தென்பாண்டி காட்டார், ஆவினைப்பெற்றமென் றும், சோற்றைச் சொன்றி என்றும்; குட்ட நாட்டார் தாயைத் தள்ளே என்றும் ; குடநாட்டார் தந்தையை அச்சன் என்றும்; கற்கா நாட்டார் வஞ்சரைக் கையர் என்றும்; வேளுட்டார் தோட்டத்தைக் கிழார் என்றும்; பூழி நாட்டார் சிறுகுளத்தைப் பாழி என்றும் , அருவா நாட்டார் செய்யைச் செறு என்றும், சிறுகுளத்தைக் கேணி என்றும் ; அருவாவடதலையார் புளியை எகின் என்றும்; சீத காட்டார் தோழனை எலுவன் என்றும், தோழியை இகுளே என்றும் வழங்குவர் ' என, அந்நாடு களில் வழங்கும் தமிழ்ச்சொற்கள், தமிழின் திசைச் சொற்

1. நன்னூல் சொல்லதிகாரம் சூ. 16. (விருத்தியுரை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/16&oldid=578790" இலிருந்து மீள்விக்கப்பட்டது