பக்கம்:திருமாவளவன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 5.

கள் எனக் கொள்ளப்படுவதையும், சேவைாையர் போன்ற உரையாசிரியர் பலரும், செந்தமிழ் நிலமாவன வைகையாற்றின் வடக்கும், மருதயாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும், மருவூரின் மேற்குமாம்” எனக் கூறுவதையும் -

'முன்னுறுந் தென்பாண்டி முதற்புனை டிமு ை

பன்னிரண்டு நாடும்அப் பால்நாடே-அக்காட்டுள் வையை, கருவை, மருதாறு, மருஆர் ஈடுவே ஐய, நீ வாழும் அரண்மனையோ?” எனத் தமிழ்விடு துாதும்,'

" மன்ற வாணன் மலர்திரு ஒருளால்

தென்தமிழ் மகிமை சிவணிய செய்த அடியவர் கூட்டமும் ஆதிச் சங்கமும் படியில்மாப் பெருமை பரவுறு சோழனும்

சைவ மாதவரும் தழைத்தினி திருக்கும் மையறு சோழ வளநா டென்ப"

என யாப்பருங்கலக் காரிகை மேற்கோட் செய்யுளும்’ கூறுவதையும் நோக்குங்கால், தமிழ்ச்சங்கம் தழைத்து வாழ்ந்த பாண் டி நா டே செந்தமிழ் நாடாகும் என்ற பொதுக் கொள்கைக்கு இடையில், சோழ நாடுஞ் செக் தமிழ் நாடாகும் என்ற கொள்கையும் நிலவியிருந்தது என்பதும் தெளிவாகும். -

இச் சோழரும், அவர்தம் நாடும், பண்டைய தமிழ்

நூல்களில் பாராட்டப் பெற்றிருப்பதோடு, பிறநாட்டுப் பேர்அறிஞர் பலராலும் பெருமைபடுத்தப் பெற் உள்ளன. கி. பி. 81-96-ல் எழுதப்பெற்ற பெரிபுளுஸ் lorfiô, arf;ifur' (Periplus Maris Erythraei)* argirp

1 தொல் சொல். 398 உ ை2. தமிழ்விடு எது 3. யாப்பருங் கலக்காரிகை.

4. இந்நூல் பிளைனி (Pliny) என்ற கிலால் பேராசிரியர் அளித்த குறிப்புக்களைக்கொண்டு எழுதப்பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/17&oldid=578791" இலிருந்து மீள்விக்கப்பட்டது