பக்கம்:திருமாவளவன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

திருமாவளவன்

நூலில், கொற்கையை அடுத்து, கடலைச் சார்ந்து, "கடற் கரை நாடு" என ஒன்றும், "அர்கரு" (Argaru) என்ற உள்நாடு ஒன்றும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இவை யிரண்டும் முறையே, கடலைச் சார்ந்து விளங்கிய புகாரயும், உள்நாட்டு ஊர் உறையூரையும் தலைநகர்களாகக் கொண்டு அமைக்கப்பெற்ற இரு சோழ அரசுகளையே குறிக்கின்றன என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. மேலும், அரைநூற்றாண்டு கழித்து வாழ்ந்த மற்ருெரு நில நூல் பேராசிரியர் "தாலமி" (Ptolemy) என்பார், காவிரி கடலோடு கலக்குமிடத்தில் இருக்கும் காவிரிப்பூம்பட்டினத்தைக் "கபெரிஸ்" (Khabieris) எனவும், நாகப்பட்டினத்தை "நிகாமா" (Nilkama) எனவும், சோழநாட்டு நகர் உறையூரை "ஒர்துரா ரெகியா சோரநடி" (Orthura Regia-Sormati) எனவும் அறிந்து தம் நூலில் குறித்துள்ளார். கி. பி. முதல் நூற்றண்டின் முற்பகுதியில் எழுதப்பட்ட "மிலிந்தா அரசனுடைய கேள்விகள்" (The Questions of King Milinda) என்ற புத்த நூல் ஒன்று, அக்கால கடற்கரைப் பட்டினங்களுள், சிறந்தனவற்றுள் ஒன்றாகக் "கோளபட்டினம்" என்ற ஒன்றைக் குறிப்பிடுகிறது. பாலி மொழியில் எழுதப்பெற்ற புத்த இலக்கியங்களுள் குறிப்பிடப் பெற்றுள்ள "காவேரிப்பட்டினமும்," இக் "கோள பட்டினமும்" ஒன்றே ஆகும். பாலி மொழியில் எழுதப்பெற்றதும், இலங்கை வரலாற்றை விரித்துரைப்பதும் ஆகிய "மகாவம்சம்" (Mahavamsam) என்ற நூல், கி. மு. இரண்டாம் நூற்றாண்டில், உயர் தமிழ்க் குடியில் வந்த "எளாரன்" (Elara) என்பவன், சோழ நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து இலங்கை அரசன் "அசேலன்" (Asela) என்பவனை வென்று அந்நாட்டை நாற்பத்தி நான்கு ஆண்டுகள் நீதியும், நேர்மையும் விளங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/18&oldid=1513209" இலிருந்து மீள்விக்கப்பட்டது