பக்கம்:திருமாவளவன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 7

ஆண்டு வந்தான். பின்னர், அசேலன் மகன் துட்டகா மணி ’’ (Dutthagamani) argir Laisör, இலங்கையின் ஒற்றுமையை உண்டாக்கவும், புத்தமதத்தை நிலைநாட்ட வும், எளாான் மீது படையெடுத்துச் சென்று, அனுராத புரத்தில் அவனே வென்று, அவனுக்கு இறுதிக் கடன் செய்தான் என்ற வரலாற்றைக் குறிப்பிடுகிறது. இந்த வரலாறு மகாக்ாமன்" (Mahanaman) sraảrt-Iau Trẻò கி. பி. ஆரும் நாற்ருண்டில் எழுதப்பெற்றது என்பர்."

இவ்வாறு, பழந்தமிழ் இலக்கியங்களாலும், பிறநாட்டு அறிஞர்களாலும் பாராட்டப்பெற்ற சோழ அரசர் தம் முள், கடைச்சங்க நூல்களால் பாராட்டப்பெற்ருேருள் தலை சிறந்தோன் கரிகால் பெருவளத்தான் என வழங்கப் பெறும் திருமாவளவன் ஆவன். இவனுடைய வரலாறு, புறநானூறு, அகநானூறு போன்ற எட்டுத்தொகையிலும், பொருநராற்றுப்படை, பட்டினப்பாலே போன்ற பத்துப் பாட்டினும், சிலப்பதிகாரம், மணிமேகலைபோன்ற ஐம் பெருங் காப்பியங்களிலும், பழமொழி போன்ற பதினெண் கீழ்க்கணக்கினும், கலிங்கத்துப் பரணி, விக்கிரமசோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் போன்ற பின் நூல்களிலும், மகாவம்சம் போன்ற பாலி மொழி நூல்களினும், விஜயாலயன் வழி வந்த சோழர், தெலுங்குச் சோழர் கல்வெட்டுக்கள் பல வற்றினும் குறிப்பாகவும், வெளிப்படையாகவும் கூறப் பட்டுளது. இவற்றின் துணை கொண்டு, நடுகின்று ஆராய்ந்து, திருமாவளவன் வரலாற்றை இயன்ற அளவு விரித்து உரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாம்.

1. K. A. நீலகண்ட சாஸ்திரியார், சோழர் பக். 35.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/19&oldid=578793" இலிருந்து மீள்விக்கப்பட்டது