பக்கம்:திருமாவளவன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சோழநாடும் நகரமும்

தமிழக ம் மிகப் பழைய காலத்திலிருந்தே சோ, சோழ, பாண்டிய மரபினரால் ஆளப்பட்டு வந்தது என்பது " வண் புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு” என்ற தொல் காப்பியர் கூற்ருன் தெளிவாகும். மூவேந்தர் நாடுகளும், சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என வழங்கியதோடு, அவை முறையே 'குடபுலம்,” “குணபுலம்,” தென்புலம்’ என அவை அமைந்துள்ள திசையானும் அழைக்கப் பட்டன என்பது, 'குடபுலம் காவலர் மருமான்,” “குண புலம் காவலர் மருமான், தென்புலம் காவலர் மருமான்' என்ற சிறுபாணுற்றுப்படை அடிகளான் தெளிவாம். இவற்றுள், குடபுலம் என்பது, கொல்லிமலையை உள் அடக்கிய தமிழகத்தின் மேல்பால் நிலப்பகுதியும், குண புலம் என்பது, அம்மலைக்கும், அம்மலையில் உண்டாகும் கரை போட்ட்ாற்ைறிற்கும் கீழ்ப்பாலுள்ள சிலப்பகுதியும், தென்புலம் என்பது பழனிமலைத் தொடர்க்குத் தெற் கனுள்ள நிலப் பகுதியுமாகும். செந்தமிழ் நாட்டினைச் சேர்ந்த நிலங்களாகப் பண்டைக்காலத்துக் கருதப்பட்ட பன்னிரு கிலங்களில், புனல்நாடு பன்றிநாடு அருவாகாடு என்பவை சோழநாட்டைச் சார்ந்தனவாம். அது இக் காலை, தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களும், வட, தென் ஆற்காடு மாவட்டங்களின் பகுதியும் உள் ளடங்கிய நிலப்பகுதியாகும்.

' கடல்கிழக்குத் தெற்குக் காைபுாள்வெள் ளாறு

குடதிசையில் கோட்டைக் கரையும்-வடதிசையில் எனுட்டு வெள்ளாற் றிருபத்து நாற்காதம் - சோனுட்டிற் கெல்லையெனச் சொல் '

1. சிறுபானற்றுப்படை : 47,79, 63.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/20&oldid=578794" இலிருந்து மீள்விக்கப்பட்டது