பக்கம்:திருமாவளவன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- சோழநாடும் நகரமும் 9

என்ற பழைய வெண்பா ஒன்றிலுைம் சோணுட்டெல்லே அறியக்கிடக்கிறது.

“சோழவளநாடு சோறுடைத்து, என்ற சிறப்பிற் குக் காரணமாய் இருப்பது, தன் போக்கின் பெரும்பகுதி யைச் சோழநாட்டில் பெற்றிருக்கும் காவிரிப் பேராறே ஆதலின், அச்சோழநாடு, காவிரிநாடு,” காவிரிசூழ்நாடு” "காவிரிபுரக்கும் நாடு’ என இலக்கியங்களில் வழங்கப்பட் ள்ெளது. காவிரியே அன்றி, அதற்குத் துணையாகவும் அமைந்த மற்றப் பேர் ஆறுகள் பலவும் பாய்ந்த அங் நாட்டை வளமாக்குவதால், நீர்வளம் கிரம்பியது சோழ நாடு என்ற கருத்தில் அந்நாடு, பொதுவாக, நீர்நாடு’’ எனவும் புனல் நாடு’ எனவும், அழைக்கப்பெறும்.

சோழ நாடு, தென்னுட்டு தெற்களஞ்சியம்’ என்ற சிறப்புப் பெயரினை இன்று பெற்றிருப்பதேபோல் அன் அம் பெற்றிருந்தது என்பது,

-- சாலி நெல்லின் சிறைகொள் வேலி

ஆயிரம் விளையுட் டாகக் காவிரி புரக்கும் காடு."

என்ற பத்துப் பாட்டடிகளான் விளங்கும்.

நாட்டைப்பற்றிக் கூறவந்த வள்ளுவர், தள்ளாவிளே புள், தக்கார், தாழ்விலாச் செல்வர் முதலியோர் உண்மையே நல்ல நாட்டிற்குப் பண்பாகும், என்று கூறிய வர், இருபுனலும், வாய்ந்த மலையும், வருபுனலும் காட் டிற்கு உறுப்பாகும் என்றும் கூறியது, முன்னவற்றை எய்ததற்கு இவையே துணை புரிவன ஆம் என்ற கருத் தானே ஆகும். சோழ நாடு, காவிரி புரக்கும் நாடு ; அக் காவிரி, வான் பொய்ப்பினும் தான் பொய்யாப் பெருமலை

1. பொருக ராற்றுப்படை 246-48.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/21&oldid=578795" இலிருந்து மீள்விக்கப்பட்டது