பக்கம்:திருமாவளவன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 திருமாவளவன்

யைத் தனக்குப் பிறப்பிடமாக உடையது ; ஆகவே, பெரு வறன் ஆகிய பண்பில் காலையும், நுரைத்த தலையுடன் எங் கும் பரந்து பாய்ந்து, அங்காட்டில் பொன்னேக் கொழிக் கும் காவிரி, வற்ருது பாய்வதால், அந்நாட்டு உழவர் ஏற் றம் முதலாயின கொண்டு நீர் இறைக்கவேண்டிய இன்றி

யமையாமை அற்றவர் என்பர் இளங்கோவடிகள்."

இவ்வாறு நீர்வளம் மிக்கமையால், சோழநாட்டுக் கழனிகளில் என்றும் விளை வரு; விளைவு அருமையாலும், வேலி ஆயிரமாக விளைவதாலும், விளைந்த நெற்கூடுகள் நாடெங்கும் மலைக்குன்றுகளைப்போலக் காட்சியளிக்கும் ; விளைந்து நிற்கும் செந்நெற் கதிர்களைத்தின்ற எருமைக் கன்றுகள், உண்ட இளைப்புத்திர அந்நெற் கூடுகளின் கிழ லிலே துயில்கொள்ளும்; சேற்றில் புரண்டும் தம் உடற் றினவு நீங்கப்பெருத எருமைகள், அந்நெற் கூடுகளில் தம் உடலை உராய்வதால், அக்கூடுகளின் புரிநெகிழ்ந்து, உள் கிடக்கும் உணவுப் பொருள்கள் கீழே சொரியும். ஆலை யில் இட்டுப் பிழிந்தெடுத்த கருப்பஞ்சாற்றைப் பாகு ஆக்கக் கொளுவிய தீயால், அண்மையில் உள்ள கழனி களில் மலர்ந்திருக்கும் நெய்தற் பூக்கள் வாடித் தம் கவின் இழக்கும். கடலேச்சார்ந்த சிற்றார்களைச் சூழஉள்ள கழி களில், கடற்பொருளாகிய உப்பை உள்நாட்டிற்குக் கொண்டு சென்று விற்று, அதற்கு விலையாகப்பெற்ற நெல்லொடுவத்த படகுகள் பல வரிசையாகக் கட்டப் பட்டிருக்கும். 1. காவிரிப் புதுர்ேக் கடுவால் வாய்த்தலை

ஒவிறந் தொலிக்கும் ஒலியே அல்லது ஆம்பியும், கிழாரும், வீங்கிசை யேத்தமும்,

ஒங்குர்ேப்பிழாவும் ஒலித்தல் செல்வா. சிலம்பு :10:108-111.

ஆம்பி, கிழார், பிழா முதலாயின நீர் எடுக்கும் கருவி வகைகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/22&oldid=578796" இலிருந்து மீள்விக்கப்பட்டது