பக்கம்:திருமாவளவன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடும் நகரமும் 11.

வீட்டின் வாயில்தோறும், உணவுப்பொருள்களை உலர்த்திவிட்டுக் காவல்புரியும் மகளிர், அப்பொருளை உண்ணவரும் கோழி முதலாயவற்றைத் தம் காதணிகளைக் கழற்றி அவற்றின் மீது எறிந்து ஒட்டுவர். அவ்வாறு அவர்கள் எறிந்த அக் குழைகள், நடைபயில் சிறுவர், அவ் வழியாக ஒட்டிவரும் முக்கால் சிறு தேரைப் போக வொட்டாமல் தடைசெய்யும். சிற்றார்வாழ் ஆடவர், தம் தொழில் முடிந்த ஒய்வுக்காலங்களில் இருவின் சூட்டை யும், ஆமைப் புழுக்கலையும் உண்டு, ஊர்மன்றங்களில் ஒன்றுகூடித் தம்தம் ஆற்றல் தோன்ற ஒருவர் மெய், ஒருவர் மெய்யோடு பொருந்த விளையாட்டுப் போர்செய்தும், ஆட்டுக்கிடாய்ச் சண்டை, கோழிச் சண்டை முதலாயின கண்டும் களித்து வாழ்வர். இத்தகைய வளம்மிக்க குடிகள் வாழும் சிற்றார்கள் பல நிறைந்தது சோழநாடு.

தங்களைப்பற்றிப் பிறர் கூறும் புகழ் உரைகள் மேன் மேலும் வளர்வதை விரும்புவோர் அமைத்த அறக்கூழ்ச் சாலைகளில், சோறு ஆக்கிய கொழுங்கஞ்சி, ஆறுபோலப் பரந்து ஒழுகும் ; அதன்மீது ஏறுகள் பொருவதால் அக் கஞ்சி சேறுபடும் ; அச்சேற்றின்மீது தேர் பல ஒடுவதால் சேறு புலர்ந்து வெண்ணிறத் துகள்கள் அந்நாடெங்கும் பறக்கும். அங்காட்டு ஆடவரும், மகளிரும் தம் உடற் பிணிபோகக் கடல் நீரில் குளித்தும், பின்னர்க் கடல் நீர் பட்டதால் உண்டாகிய உப்பு போன்ற மாசுபோகுமாறு, கடற்கரையைச் சார்ந்துள்ள நல்ல நீர்நிலைகளில் படிந்து ஆடியும் வருவர். அங்காட்டு மக்கள், மாலைவேளையில் பாடல் ஒர்ந்தும், நாடகம் நயந்தும், வெண்ணிலவின் பயன் துய்ப்பதற்காக மாகாவிரி மணலிலும் கடற்கரைச் சோலைகளிலும் தங்கித் துயில் கொள்வர். சோழநாட்டு மக்கள் பகலில் உடுத்த பட்டாடையை நீக்கிவிட்டு, இாவிற்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/23&oldid=578797" இலிருந்து மீள்விக்கப்பட்டது