பக்கம்:திருமாவளவன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T2 திருமாவளவன்

கான மெல்லிய துகில் உடுத்தும் அளவு உயர்ந்த நாகரிகம் பெற்று விளங்கினர்.

சோழநாட்டு நகரங்களாகப் பண்டைக்காலத்தில் விளங்கியவை என, புகார், உறையூர், அழுந்தார், ஆவூர், வெண்ணில், இடையாறு, குடந்தை முதலாயின சிறப் பாகக் கூறப்பட்டாலும், அவற்றுள் புகாரும், உறையூருமே திருமாவளவன் காலத்தில், சோழநாட்டுத் தலைநகர்களாகச் சிறப்புற்றிருந்தன.

புகார் :-சோழர் தம் பழைய ஊர் புகார். ' சோழன் மூதார்ப் பேராச் சிறப்பின் புகார்’ என இதன் பழைமை யும் சிறப்பும் தோன்றப் பாராட்டுவர் இளங்கோவடிகள்." இந்நகர் பதியெழுவறியாப் பழங்குடிகளையும், பொதுவது சிறப்பினையும்” உடையது என்ப. இது காவிரிப்பூம் பட் டினம் எனவும் அழைக்கப்பெறும். காவிரிப்பூம் பட்டினம், காவிரியாறு கடலொடு கலக்குமிடத்தில், அமைந்திருப்ப தால், கடல் வாணிபம் சிறந்து விளங்கப் பெருந்துணையாம் என்று கொண்ட திருமாவளவன் காலத்தேதான் இது சோழர் தலைநகராக ஆக்கப்பெற்றது. ககந்தன்” என்ற மன்னன் இருந்து ஆண்டதால் இந்நகர் காகந்தி’ என் றும் அழைக்கப்பெறும்." இந்நகர்க்குச் சம்பாபதி” என்ற பெயரும் உண்டு. சுமாரம்’ (Kamaram) எனப் பெரிப்புளுஸ் அவர்களாலும், ' கபேரிஸ்’ (Kabetis) எனத் தாலமி அவர்களாலும் அழைக்கப்பெற்றது. இங் நகரே என்பர். இது புறநகர், அகநகர் என இருகூருக

1. சிலப்பதிகாரம் : பதிகம்: 12. —n

2. மங்கலம் 15-16.

3. மணிமேகலை : 22 : 37.

4. ப். உலகநாத பிள்ளை கரிகாலன்: பக். 50.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/24&oldid=578798" இலிருந்து மீள்விக்கப்பட்டது