பக்கம்:திருமாவளவன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழர்ைடும் நகரமும் 13.

விளங்கும். அவற்றுள் புறநகர் மருவூர்ப்பாக்கம் எனவும் அகநகர் பட்டினப்பாக்கம் எனவும் வழங்கப்பெறும். இவ் விரு பகுதிகளுக்கு மின்டயில் மரங்கள் செறிந்த சோலை யில், அம்மாங்களின் கால்களே தூண்களாகக்கொண்டு கட்டப்பெற்ற கடைகளை உடைய நாளங்காடி விளங்கும். ஆங்குப் பொருளைக் கொடுப்போர் ஒதையும், அவற்றைக் கொள்வோர் ஒதையும் எப்போதும் ஒயாது கிலேபெற்று ஒலிக்கும்.

இவற்றுள் மருவூர்ப்பாக்கம் கடலைச் சாவுள்ளது. ஆங்கே கடலிற்செல்லும் கலங்களுக்கு இாவில் வழிகாட்டி யாக விளங்கும் கலங்கரை விளக்கமும் (Light House), கலங்களில் வந்த பொருள்களுக்கும், கடலிற் செல்ல இருக்கும் பொருள்களுக்கும் உரிய தீர்வையை வரையறுத் துக் கடமை கொள்ளும் ஆயத்துறைகளும் (Custom. House), சுங்கம் இறுத்த பின்னர் சோழமன்னரின் இலச்சினையாகிய புலி பொறிக்கப்பெற்ற பண்டப் பொதி களே ச் சேர்த்துவைக்கும் பண்டசாலைகளும் (Ware House), š-šić53.65% (Godowns), e-uffää, Gubanகளும் (Docks and Piers) அமைந்துள்ளன. இவற்றை படுத்து, பொருள் ஈட்டும் முயற்சி மேற்கொண்டு கடல் கடந்துவந்த யவனர் முதலாய பிற நாட்டு மக்கள் தம்முள் பகை சிறிதும் இன்றிக் கலந்து உறவாடி வாழும் இடங்கள் அமைந்துள்ளன. வண்ணம், சுண்ணம் முதலாய வாச னேப் பொருள்களேச் செய்து விற்போரும், பட்டானும், மயிரானும், பருத்தி நூலானும் ஆடை முதலாயின செய்யும் சாலியரும், முதிரை முதலாய கூலங்களைக் குவித்து விற்கும் கூலவணிகரும், பிட்டு, அப்பம், கள், மீன், கடல் உப்பு, வெற்றிலை, இறைச்சி ஆக இவற்றை விற்போரும், கருங்கைக் கொல்லர், செம்பு செய்குனர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/25&oldid=578799" இலிருந்து மீள்விக்கப்பட்டது