பக்கம்:திருமாவளவன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 திருமாவளவன்

வெண்கலக் கன்னர், பொன்செய் கொல்லர், மண்ணுல் பாவை முதலாயின செய்வோர், ஒவியக்காரர், தையல் தொழிலாளர் முதலாய தொழிலாளரும், பாணர், குழலர் முதலாய இசைகாரரும், பிறர் எவலை ஏற்றுச் செய்யும் பணி செய்வோரும் தனித்தனியே வாழும் தெருவுகள் பல கிறைந்து விளங்கும். பொதுவாக நோக்கின் வாணி பம் முதலாயின செய்து பொருள் ஈட்டும் மத்திய வகுப்பு inăşeşti (Middle class peoples) e-Léo adjäää தொழிலாற்றி வயிறு வளர்க்கும் தாழ்ந்த வகுப்பு மக்களும் (Backward and the Depressed) auragth 3-lb 1005 ஆர்ப்பாக்கம் என்பது விளங்கும்.

கடற்கரையைச் சார்ந்த, அணுகுதற்கரிய காவல் அமைந்த பெரிய பண்டசாலையின் கண், நிலத்திலே இருந்து கலங்களில் ஏற்றுவதற்காகக் கொணர்ந்த உள் நாட்டுப் பொருள்களும், கலத்திலிருந்து நிலத்தில் இறக்கங் பட்ட வெளிநாட்டுப் பொருள்களும், வரம்பறியாமல் வந்து குவிந்துள்ளன. அவ்வாறு வந்து குவிந்துள்ள அப் பொருள்கள், அரசன்பொருளைப் பிறர்கொள்ளாமல் காக்கும் புகழ் கிறைந்த சுங்கம் கொள்வோர் ஒருபொழு தும் மடிந்திராது, நாடோறும் இளைப்பின்றி, உரிய சுங்கத் தில் குறைவு நேராமல் கொள்வதற்காக, மதிப்பிடப் பெற்று, அரச இலாஞ்சனேயாகிய புலி பொறிக்கப்பெற்று மலைபோல அடுக்கப் பெற்றுள்ளன.

கடல் வழியாகக் காற்றின் இயக்கத்தால் வந்த கலங்கள் கொணர்ந்த, விரைந்த செலவின உடைய குதிரைகளும், கரியமிளகுப் பொதிகளும், மேருமலையில் தோன்றிய மணி யும், பொன்னும், பொதிய மலையில் தோன்றிய அகிலும் , சந்தனமும், தென்கடலில் பிறந்த முத்தும், கீழ்க்கடலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/26&oldid=578800" இலிருந்து மீள்விக்கப்பட்டது