பக்கம்:திருமாவளவன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடும் நகரமும் 15

பிறந்த பவளமும், சுங்கை பாயும் வடகாட்டிலிருந்து வந்த யானை முதலாயினவும், காவிரியாற்ருல் விளைந்த பல பொருள்களும், கடாரமாகிய பர்மாவிலிருந்து வந்த பொருள்களும், ஆகிய அரிய பெரிய பொருள்கள் எல்லாம் அளவு தெரியாமல் கிறைந்து வளம் மிகுந்த கடைவீதி களில், அப்பொருள்களை விற்போர், பழியஞ்சும் பண்பினர் ஆகவே, பொருள்களே வாங்குவோர்பால் அப்பொருள் களின் தன்மை, விலை, தமக்கு வரும் ஆக்கம் இவற்றை உண்மையாகக் கூறியும், பொருள்களைக் கொள்ளும்போது தாம் கொடுக்கும் பொருளுக்கு உரிய விலக்கு மேலே கொள்ளாமலும், பொருளைப் பிறர்க்கு விற்கும்போது அப்பொருளிற்கு விலையாகப் பெற்றதற்குக் குறைவாகக் கொடுக்காமலும், தம் பொருளையும், பிறர் பொருளையும் ஒன்ருகவே மதித்து விற்பர்.

மகதச் சிற்பரும், மராட்டக் கொல்லரும், யவனத் தச் சரும் கூடிக் கண்ணேக் கவரும் வனப்புடன் அமைத்த அரசன் கோயில் பட்டினப்பாக்கத்தே விளங்கும். அவ் வரண்மனையைச்சூழ கடும்பரி கடவுநர், களிற்றின்பாகர், நெடுந்தேர் ஊருநர், கடுங்கண் மறவர் முதலாய கால்வகைப் படையாளர் வாழும் தெருவுகள் அமைந்துள்ளன. தேரோடும் தெருவும், பெரிய கடைத்தெருவும் இருப்பது இங்கேதான். மறையோர், வீழ்குடிஉழவர், மருத்துவர், காலக்கணிதர் முதலியோர் தனித்தனியே வாழும் தெருவு களும் உண்டு. முத்துக்கோப்போர், வளையல் அறுப் போர், நாழிகைக் கணக்கர், காவற்கணிகையர், ஆடல் கூத்தியர், கைவேழம்பர் முதலியோர் வாழும் இடங்களும் இங்கேதான். ஆக, பட்டினப்பாக்கம் அரசனும், அவன் குழுவும், அரசனுல் மதிக்கத்தக்க பெரும்பொருள் உடை யாரும், அவர்க்கு இன்பம் ஊட்ட ஏற்றன செய்வோரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/27&oldid=578801" இலிருந்து மீள்விக்கப்பட்டது