பக்கம்:திருமாவளவன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 திருமாவளவன்

ஆகிய உயர் வகுப்பு மக்கள் (High class peoples) வாழும் இடம் எனல் பொருந்தும். -

அந்நகருள் வேனிற்காலத்தே அரசன் இருந்து பயன் துய்க்கும் இலவந்திகைச் சோலையும், கரிகாற் பெருவளத் தான் வடநாடு சென்றபோது கொணர்ந்த வச்சிாநாட்டுக் கோன் இறையாகத் தந்த கொற்றப் பந்தலும், மகதநாட்டு மன்னன் கொடுத்த பட்டிமண்டபமும், அவங்கி வேந்தன் உவந்துகொடுத்த தோாணவாயிலும், இது இன்னபொருள்; இன்னருடையது ; இன்ன நிறையது ; என்று எழுதப் பெற்றுக் குவித்துவைக்கப்பட்டுள்ள பொதிமூட்டைகளைக் காவல் கடிந்து களவாடுவோர் உண்டானல், அக் கள்வர் தலைமீதே அப்பொருளை வைத்து ஊரைச் சுற்றிவந்து அப் பொருளை மீட்டுக்கொள்வதாகிய தண்டம் அளிக்கும் தன்மைவாய்ந்த வெள்ளிடை மன்றமும்; கூனும், குறளும், ஊமையும், செவிடும், தொழுநோயாளரும், நீராடி வலம் வர, அவர்தம் நோயைப்போக்கும் இலஞ்சி மன்றமும்; மருந்துண்டு பித்தேறினரும், நஞ்சுண்டு துயர் உற்ருேரும், பாம்புகோட்பட்டாரும், சூர்கோட்பட்டாரும் சூழவருத லானே அவர்தம் துயர்போக்குதற்குக் காரணமான ஒளி யைக் கக்கும் கல்கின்ற மன்றமும், தவமறைந்து அவமே செய்வார், தீயொழுக்கமுடையோர், அறைபோகு அமைச் சர், பொய்க்கரியாளர், புறங்கூற்ருளர் இவரைத் தன் கைக் கொள் பாசத்துக் கைப்படுத்துப் புடைத்துண்ணும் பூதம் நிற்கும் மன்றமும்; அரசுகோடினும், அறங்கூர் அவையத் தார் முறை பிறழினும் அதை நாவால் கூருதே, கண்ணிர் உகுத்த அழுத அறிவிக்கும் பாவை மன்றமும் சிறப் புடைய இடங்களாகும்.

நகரில் நடைபெறும் பல்வேறு விழாக்கள் குறித்து ஏற்றப்பெற்ற கொடிகளும், தம்மோடு வாதிட விரும்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/28&oldid=578802" இலிருந்து மீள்விக்கப்பட்டது