பக்கம்:திருமாவளவன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடும் ககரமும் - 17

வோர் வரலாம் எனக் கற்றுத்துறைபோகிய நல்லாசிரியர் கள் எடுத்த கொடியும், இன்ன இடத்தே இன்ன பொருள் விற்கப்படும் என விளக்கம் அளிக்க எடுத்த கொடிகளும், புகார்த் துறைமுகத்தே காற்றின் அசைவிற்கேற்பக் கம்பத் தில் கட்டப்பெற்ற யானைகள் அசைவதேபோன்று அசைந்தகொண்டே இருக்கும் கலங்களின் கூம்புகளில் கட்டப்பெற்ற கொடிகளும் அக்ாகர் முற்றும் கிறைந்து கிழல் செய்யும். கீழே வீழ்ந்துகிடக்கும் வெண்சிறு கடு கும் விளக்கமாகத் தெரியும் அளவு பேரொளிவீசும் விளக்குகள் பல அந்நகரெங்கும் கின்று சுடர்விட்டுக் கொண்டே இருக்கும்." -

ஆண்டுதோறும், சித்திரைத்திங்கள் முழுவிலாக் காலங் தொடங்கி, ஒரு திங்கள் வரை இந்திர விழா நடைபெறும் என்று சிலப்பதிகாரமும், மணிமேகலையும் கூறும். அவ் விழாவின் காரணத்தையும், நடைமுறைச் சிறப்பையும் ஆண்டுக் கண்டுகொள்க. ஈண்டு விரிப்பின் பெருகும்.

உறையூர் :- வென்றெறி முரசின் விறற்போர்ச் சோழர் இன்கடுங்கள்ளின் உறந்தை ’’ என்ற உறையூரில் பிறந்த புலவர் முதுகூத்தனர் பாட்டில்ை உறந்தை என வழங்கும் உறையூர் சோழர்க்கு உரிமை உடைத்தென்பது தெளிவாகும். இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனர் காலத்தில் சோழர்க்குத் தலைநகராக விளங்கியது உறங்தை ஒன்றே; அவர் மூவேந்தர் தலைநகரைக் குறிப்பிடும்பொழுது " வஞ்சியும் வறிதே' “ மதுரையும் வறிகே, உறக் தையும் வறிதே' எனச் சோழர் தலைநகராக உறந்தை

வெப்பதிவில் 3 184-141. - 2. சிலப்பதிகாரம்: இந்திரவிழா; மணிமேகலை விழாவமைகாதை * 3. அகநானூறு : 187. - 4, 5, 6. சிறுபாணுற்றுப்படை : 50, 67, 83,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/29&oldid=578803" இலிருந்து மீள்விக்கப்பட்டது