பக்கம்:திருமாவளவன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 திருமாவளவன்

ஒன்றையே குறிப்பிடுதல் காண்க. ஆளுல் சிலப்பதிகாரம் பாடிய ஆசிரியர் இளங்கோவடிகள் காலத்தே சோழர் தலைநகர் இரண்டாக விளங்கிற்று என்பது மாடமதுரை யும் (பாண்டியர்), பீடார் உறந்தையும் (சோழர்), கலிகெழு வஞ்சியும் (சோர்), ஒலிபுனல் புகாரும் (சோழர்)’ எனச் சோழர் தலைநகர் இரண்டு குறிப்பிடப்பட்டமையால் உணர லாம். கரிகாலன் தன் காலத்தே உறந்தையைப் புதுப் பித்துப் பகைவர் கிட்டுதற்கரிய பெரிய அரண் அமைந்த நகராக ஆக்கினன் என்பதை,

“ பிறங்குநிலை மாடத்து உறந்தை போக்கிக்

கோயிலொடு குடிகிறீஇ, - - வாயிலொடு புழை அமைத்து ஞாயில் தொறும் புதை கிறீஇ' என்ற பட்டினப்பாலே அடிகளான் அறியலாம்.

உறந்தைக்குக் கோழி என்ற வேறு பெயர் உண்டு என்பதையும், அப்பெயர்க் காாணத்தையும், முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கிய புறஞ்சிறை வாரணம்’ என்ற சிலப்பதிகாரப் பகுதியும், அதற்கு அடியார்க்கு நல் லார் எழுதிய, "முற்காலத்து ஒரு கோழி யானையைப் போர் தொலைத்தலான், அங்கிலத்திற் செய்த நகர்க்குக் கோழி என்பது பெயராயிற்று, என்ற விளக்க உரையும் விளக்குவது காண்க. உறந்தையின் கண் ஒர் அறங்கூர் அவை உண்டென்றும் அதில் அறம் கின்று நிலைபெறும் என்றும் மாருேக்கத்து நப்பசலையாரும், காவிரிப்பூம்பட் டினத்துக் காரிக்கண்ணனரும் கூறுவர். உறந்தையிலும்,

1. சிலப்பதிகாரம்.8 : 3 - 4. 2. பட்டினப்பால: 285.88. 3. சிலப்பதிகாரம் 10:247-48. 4. மறங்கெழு சோழர் శ5 அவையத்து

5.

அறம் கின்று நிலையிற்று -புறச்ானூறு : 39. 'அறம் துஞ்சு உறக்தை' - -புறசானூறு : 58.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/30&oldid=578804" இலிருந்து மீள்விக்கப்பட்டது