பக்கம்:திருமாவளவன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடும் நகரமும் 19

புகாரில் நடைபெறுவதைப் போன்றதொரு விழா, காவிரி யாற்றில் பங்குனித் திங்களில் நடைபெறும் என்று, அவ் ஆரில் பிறந்த முதுகூத்தனரே அறிவிக்கின்ருர். இவ் விழா, பங்குனித்திங்களில் உத்தரமும், நிறைமதியும் கூடிய நன்ளிைல் நடைபெறும் என்பதும், @:.5 அக் காலப் பெருவிழாக்களில் ஒன்று என்பதும், ' களவினுட் டவிர்ச்சி” என்னும் இறையனர் அகப்பொருட் சூத்திர வுரையில், இனி ஊர் துஞ்சாமை என்பது, ஊர்கொண்ட பெருவிழாநாளாய்க் கண்பாடில்லையா மாகவும் இடிை யீடாம் என்பது; அவை, மதுரை ஆவணி யவிட்டமே, உறையூர்ப் பங்குனி புத்தரமே, கருவூர் உள்ளிவிழாவே என இவையும் இவைபோல்வன பிறவும் எல்லாம் அப் பெற்றியானபொழுது இடையீடாம் என்பது,' என வருத லான் அறியப்படும். அவ்வுறையூர் நொச்சிவேலியால் குழப்பெற்றது என்றும், அது சித்தன் என்பானுக்கு உரிமை உடையது என்றும், அவனுடைய நாளோலக்கம் மிகச் சிறப்புடையது என்றும், அந் நாளோலக்கச் சிறப் பைக் கேட்டே அவைேடு போரிடவந்த கட்டி என்பவன், அஞ்சிப் பொராதே ஒடிவிட்டான் என்றும் பாணர்

கூறுவர்."

1. உறந்தை யாங்கண்

வருபுனல் செறிதரு மிகுகாைப் பேரியாற்று 2. ருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழில் பங்குனி முயக்கம்” - -அகநானூறு : 187. 2. இறையனர் அகப்பொருள்: களவியல்: குத். 16. 3. நொச்சி வேலி தித்தன் உறந்தை' -அகநானூறு: 122. 4. சித்தன் வெளியன் உறந்தை நாளவைப்

பாடின் தெண்கிணைப் பாடுகேட் டஞ்சிப் போாடு கானைக் கட்டி - பொாாஅ தோடிய ஆர்ப்பு.’ -அகாானூறு: 226.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/31&oldid=578805" இலிருந்து மீள்விக்கப்பட்டது