பக்கம்:திருமாவளவன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பெற்ருேரும் உற்ருேரும் வெல்வேல் உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்’’’ என்ற தொடரானும், மன்னர் பாங்கிற் பின்னாாகுப' என்ற தொல்காப்பியம் அகத்திணையியல் குத்திர உரை யில்’ உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னி, அழுந்துார் வேளிடை மகட்கோடலும், அவன் மகன், கரிக்ாற்பெரு

' என

வளத்தான் நாங்கூர் வேளிடை மகட் கோடலும் வரும் நச்சினர்க்கினியர் வாக்கானும், கரிகாலன் தந்தை உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி என்பவனே ஆவன். என்பது தெளிவாம். .

ஊன்பொதி பசுங்குடையார் பாராட்டியோராகச் சேரமான் பாமுளுர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி என்பவனும், செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி என்பவனும்' ஆக இருவர் உளர். இரண்டாவ தாகக் குறிக்கப்பெற்ற இளஞ்சேட் சென்னிக்கு அடை மொழியாகக் கூறப்பட்ட "செருப்பாழி எறிந்த” என்ப தற்குப் போர்க்களமாகிய பாழி என்ற ஊரை அழித்த” என்றே பொருள் கொள்ளுதல் வேண்டும். பாழி, போர் பல நிகழ்ந்த இடமாக இருப்பதால், செருப்பாழி என்ப தற்குப் போர்க்களமாகிய பாழி என்பதே பொருள். பாழி

1. பொருநராற்றுப்படை: 180. 2. தொல்காப்பியம்: அகத்திணையியல், குத். 30, 3. புறநானூறு 10, 208. 4. புறநானூறு 370, 378, 5. இளஞ்சேட் சென்னி என்பவன் பாழியை எறிந்தான் என்ற வரலாறு புறநானூறு 370, 378 செய்யுட்களானும், இளம்பெரும் சென்னி என்பவன் பாழியை நூறினன் என்ற வரலாறு அகம் 375 செய்யுளானும் அறியப்படுவதோடு, பாழிப்பறந்தலையில், மிDலி என்பவைேடு பொருது ஆயிர்துறந்த ஆஅய் எயினன் வரலாறும் பாணரால் அறிவிக்கிப்படுகிறது. (அகாானுாறு : 208, 396.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/33&oldid=578807" இலிருந்து மீள்விக்கப்பட்டது