பக்கம்:திருமாவளவன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 திருமாவளவன்

என்பது சேர நாட்டகத்ததோர் ஊராக விளங்குவதா அம், சேரமான் பாமுளுர் எறிந்த இளஞ்சேட் சென்னி 'யும், சேரநாட்டைச் சேர்ந்த பாமுளுர் என்ற ஊரை வென்றதாகத் தெரிவதாலும், இருவர்க்கும் இளஞ்சேட் சென்னி என்ற பெயர் ஒற்றுமை உண்மையானும், இரு வரையும் பாராட்டிய புலவர் ஒருவராகவே இருப்பதாலும், சேரமான் பாமுளுர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியும், செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி யும் வேறுவேறு அல்லர்; ஒருவரே என்று கொள்ளுதல் பொருந்தும். t

இனி, வம்ப வடுகரை ஒட்டிப் பாழியை அழித்த இளம்பெருஞ் சென்னி என்பவன் ஒருவன் வரலாறு 65/منے நானுாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. செருப்பா ழி எறிந்த இளஞ்சேட் சென்னியும் வடுகரை வென்முன் எனப் புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளான். பாழி அழித்தலும், வடுக ைவேறலும் இருவருக்கும் ஏற்றிக் கூறப்பட்டுள்ளமையாலும், இளஞ்சேட் சென்னி, இளம் பெருஞ் சென்னி என்ற பெயர்கள் ஒற்றுமை கொண்டி ருப்பதாலும், அகத்தில் கூறப்பெற்ற இளம்பெரும் சென்னி செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியே ஆவன் என்பது துணிவாம்; ஆகவே, சோமான் பாமுளும் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி, செருப்

1. எழாஅத் திணிதோள் சோழர் பெருமகன்

விளங்குபுகழ் கிறுத்த இளம்பெருஞ் சென்னி குடிக்கடன் ஆகலின் குறைவினை முடிமார் செம்புறழ் புளிசைப் பாழி நூறி - வம்ப வடுகர் பைந்தலே சவட்டிக் கொன்ற யான” -அகநானூறு : 375.

2. 'தென் பரதவர் மிடல் சாய - ---

வடவடுகர் வாளோட்டிய” -புறநானூறு : 378,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/34&oldid=578808" இலிருந்து மீள்விக்கப்பட்டது