பக்கம்:திருமாவளவன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்ருேரும் உற்றேரும் - 23 பாழி எறிந்த இளம்சேட் சென்னி, இளம்பெரும் சென்னி

என மூவராகக் கூறப்பட்டோன் ஒருவனே என்பது தெளிவாம்.

இனி, சேரமான் பாமுளுர் எறிந்த இளஞ்சேட் சென் னியைப் பாடும்பொழுது, இயல்தேர் அண்ணல்" என அவன் தேர் உடைமை பாராட்டப் பெற்றுள்ளமையா லும், இளஞ்சேட் சென்னி என்ற பெயர் ஒற்றுமையா லும், எவ்வித அடைமொழியும் இன்றி இளம்பெரும் சென்னி' என்றும் அழைக்கப்பட்டுள்ளமையாலும், உரு வப் பஃறேர் இளஞ்சேட் சென்னியும் போர் பல செய்த வன் என்று தெரிவதாலும், அவன் மகன் கரிகாலன் பகை வர்களாகப் பாழியில் பெரும்பொருள் சேர்த்துவைத்த வேளிர்களும், அவர்கள் தலைவன் இருங்கோ வேளும் கூறப்பட்டுள்ளமையாலும், அவர்கள் கரிகாலன்மீது அவன் இளமைக் காலத்திலேயே போர்தொடுத்தது, அவன் தந்தை தங்கள் பாழியை அழித்தமைக்குப் பழி வாங்கும் எண்ணத்தால் இருக்கலாம் ஆதலாலும் பாழிக்

1. புறநானூறு: 203. 2. நன்னன் உதியன் அருங்கடிப் பாழித்

தொன்முதிர் வேளிர் ஒம்பினர் வைத்த பொன்' - -அகநானூறு : 258. * பாழி யாங்கண்

வேண்முது மாக்கள் வியனகர்க் காந்த *. அருங்கல வெறுக்கை” -அகநானூறு : 372. 3. பாழியை ஊறி வம்பவடுகர் பைந்தலை சவட்டினன் இளம் பெருஞ்சென்னி என்று கூறியதோடு அமையாது, 'குடிக்கடன் ஆகலின் குறைவினை முடிமார்” என்ற தொடரால், அப்பாழிப்போர், சோழர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என் பதும், அஃது அவன் காலம்வரை சோழர்க்குக் குறைவினையாகவே இருந்து வந்தது என்பதும் விளங்கவைப்பர் இடையன் சேந்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/35&oldid=578809" இலிருந்து மீள்விக்கப்பட்டது