பக்கம்:திருமாவளவன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்ருேரும் உற்ருேரும் 25

தலையில் பொருது வெற்றிகொண்டான்' என்று கூறப் படுவதால், கரிகாலனும் அப்பாழியோடு யாதேனும் தொடர்புடையணுதல் வேண்டும் என்று கருத இடமுண்டு ஆதலாலும், உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி, சோ மான் 'பாமுளுர் எறிந்த இளஞ்சேட் சென்னி, செருப் பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி, இளம்பெரும்சென்னி என்ற நால்வரும் வேறு வேறு அல்லர்; ஒருவரே என்று கொள்ளுதல் நேரிதாம். திருவாளர். K. V. சுப்பிரமண்ய அய்யர் அவர்களும், கரிகாலன் தந்தை நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி ஆகும்” என்று கூறுவது இக் கொள்கையை மேலும் அரண் செய்வதாகும்.

உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி, தேர், யானே, குதிரை, காலாள் என்ற நால்வகைப் படையுடன் அழகிய கேர்மீது சென்று தன் பகைவர் நாடுகள் எல்லாம் தாயில் துவாக்குழவி போல ஓயாது கூவுமாறு அந்நாடுகளை அழிப்பன். இத்தகைய பெரு வீரனுய் விளங்கிய அவன். தன்பால் வரும் இரவலரைப் பேணிப் புரத்தலினும் சிறந்த விருப்பம் உடையன் ஆவன்.

'உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி அழுந்துர் வேளிடை மகட்கோடலும்' என்ற நச்சினர்க்கினிய கூற்றும், கரிகாலன் வெண்ணிப் பறந்தலையில் பெற்ற வெற்றி குறித்து அழுந்துாரில் விழாக் கொண்டாடப்

1. 'கரிகால் முன்னிலைச் செல்லார்

சூடா வாகைப் பறந்தலை ஆடுபேற ஒன்பது குடையும் என்பகல் ஒழித்த பீடில் மன்னர்' -அக நானுாறு :125 2. Indian Antiuary Vol 41. P 14, V 7. 3. தொல் பொருள் அகம். சூ. 30. உரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/37&oldid=578811" இலிருந்து மீள்விக்கப்பட்டது