பக்கம்:திருமாவளவன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 திருமாவளவன்

பெற்றது எனப் பாணர் கூறும்வரலாறும் கரிகாலன் தாய் அழுந்துர் வேள்பெற்ற மகளே என்பதை உறுதி செய் கின்றன. அவ்வம்மையார் தணவன் இறந்த பின்னரும் உயிர்வாழ்ந்து கரிகாலனைப் பெற்று பகைவர் கைப்பட்டு அழிந்துபோகாமல் அவனைக் காத்து அவன் பீடும், பெரு மையும் பெற்றுவிளங்க வகை செய்தவராவர்.

கரிகாலன் மனைவியார் நாங்கூர் வேள் பெற்ற மகள் ஆவர். இச்செய்தி, கரிகாற் பெருவளத்தான் நாங்கூர் வேளிடை மகட்கோடலும்’ என்று கச்சினர்க்கினியர் கூறும் செய்தியானன் றிப் பிறிதொன்ருன் துணியப் பெற வில்லை. இனிக் கரிகாலன் இறந்த பின்னர் அவன் பிரிவாற் ருது வருந்தும் கருங்குழலாதனர் என்ற புலவர்' ‘துக ள று மகளிநெர்டு வேத வேள்வித் தொழில் முடித்தான்” எனவும், மகளிரும் இழைகளைந்தனர்' எனவும் மகளிர் எனப் பன்மை வாய்பாட்டான் கூறுவதால், நாங்கூர் வேள் மகளே அன்றி வேறு பல மகளிரும், கரிகாலனுக்கு மனைவியராய் இருந்தனர் என்று எண்ணவேண்டியுளது. பட்டினப்பாலே பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனரும்

1."காய்சின மொய்ம்பிற் பெரும்பெயர்க் கரிகால்

ஆர்கலி சறவின் வெண்ணி வாயில் சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பின் இமிழிசை முரசம் பொருகளத் தொழியப் பதினுெரு வேளிரோடு வேந்தர் சாய மொய்வலி யறுத்த ஞான்றைத் தொய்யா அழுந்தார் ஆர்ப்பினும் பெரிதே' -

-அகநானூறு : 246.

2. வடாற்காடு மாவட்டம் செய்யாறு தாலுக்காவில் வேளாளர்

வாழும் வடநாங்கூர் தென்னங்கூர் என்ற ஊர்கள் இருக்கின்றன.

3. தொல். பொருள், அகம் கு. 30 உரை. 4. புறநானூறு: 224,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/38&oldid=578812" இலிருந்து மீள்விக்கப்பட்டது