பக்கம்:திருமாவளவன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்ருேரும் உற்ருேரும் 27.

கரிகாலன் மனைவியார் பலராவர் என்ற கருத்துடைய வரே . . -

பொன்தொடிப் புதல்வர் ஒடி ஆடவும்” என்ற குறிப்பால், கரிகாலனுக்கு மக்கள் பலர் இருந்தனர் என்பதுமட்டும் பெறப்படும். 'மனக்கிள்ளி, வேற்பஃற டக்கைப் பெருவிறற்கிள்ளி இருவரையும் கரிகாலன் மக்களாகக் கருது தற்கு இடமுண்டு” என்றும் "உறையூரி நெடுங்கிள்ளியும், புகார்க்கிள்ளிவளவன், நலங்கிள்ளி, மாவளத்தான்களும் கரிகாலன் மகார்வயிற்றுப் போர்கள் ஆதல்வேண்டும்” என்றும் கூறுவர், சேரன் செங்குட்டு வன்” நூலாசிரியர் திருவாளர் மு. இராகவையங்காரவர் கள். அவர் அவ்வாறு கொள்வதற்கு ஆதாரமாகக் காட் டும் பகுதி, செங்குட்டுவனுடைய தாயுடன் பிறந்த அம்மானும், சோழன் மணக்கிள்ளியின் மகனுமாகிய நெடுங்கிள்ளி, உறையூரிலிருந்து ஆண்டுவந்தான். இவ் வுறையூர்ச் சோழர்க்கும், புகார்ச் சோழர்க்கும் பெரும் பகை உண்டு. புகார்ச் சோழர் கிள்ளி வளவனும் அவன் தம்பி நலங்கிள்ளியுமாவர்; கரிகாலன் காலத்தில் ஒராட் சிக்குட்பட்டதாக இருந்த சோளுடு, அவனுக்குப்பின் இரு பகுதிப்பட்டதென்றும், அதனில் உறையூர் மணக்கிள்ளிக் கும், புகார் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கும். தலைநகரங்களாய் இருந்தன என்றும் தெரியவருவதால் அக்கிள்ளிகள் இருவரையும் கரிகாலன் மக்களாகக் கருது தற்கு இடமுண்டு. இவ்வாருயின், மேற்கூறிய செங்குட். வெனுக்கு மாமனை உறையூர் நெடுங்கிள்ளியும், புகார்க் கிள்ளிவளவன், நலங்கிள்ளிகளும் கரிகாலன் மகார் வயிற்றுப் போர்கள் ஆகல்வேண்டும்”* என்பதுவே ஆகும்.

1, 2. பட்டினப்பாலே 296, 295 3, 4. சோன் செங்குட்டுவன்' பக்கம் :108

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/39&oldid=578813" இலிருந்து மீள்விக்கப்பட்டது