பக்கம்:திருமாவளவன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 திருமாவளவன்

“சேரலாதற்குத் திகழ்ஒளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன்” என்ற இளங்கோவடிகள் உரையால், செங்குட்டுவன் தாய் சோழ ன் மகள் என்பதுவும், சேரலாதற்குத் திகழ்ஒளி ஞாயிற்று எழ்பரி நெடுந்தேர்ச் சோழன் தன் மகள் நற்சோனை ஈன்ற மக்கள்’’ என்ற அடியார்க்கு நல்லார் உரையால் அவள் பெயர் நற்சோணை என்பதும், சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி யின்ற மகன்' என்ற தொடரால் கற்சோணையைப் பெற்ற சோழன்பெயர் மணக்கிள்ளி என்பதுவும் பெறப்பட்டன. இத்தொடர் எல்லாம் சேர்ந்து செங்குட்டுவன் தாய், சோழன் மணக்கிள்ளி யின்ற மகள் நற்சோனை என்று மட்டும்தான் பொருள் கொள்ளப் பயன்படுமே ஒழிய, அம் மணக்கிள்ளி, கரி காலன் மகனே என்பதுவோ, அவன் (மணக்கிள்ளி) உறை யூரைத் தலைநகராகக்கொண்டிருந்தான் என்பதுவோ, அவ

1. சிலப்பதிகாரம் : 29 : உரைப்பாட்டு மடை

2. சிலப்பதிகாரம்: பதிகம்:- இது செய்யுளன்றி உரைநடை யாதலின், ஏழ்பரி நெடுந்தேர் ஞாயிற்றுச் சோழன் என மாற்றிக் கொள்ளாது, கிடந்தாங்குகொண்டு, ஞாயிற்றைப்போல எழ்பரி பூண்ட நெடுந்தேர்ச்சோழன் என்று பொருள்கூறி, இத்தொடர் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியைக் குறிக்கும் என்று கொள்ளுதலும் கூடும்; பல்கேர், பல குதிரைகள் பூட்டியதேர் எனலு மாம் ஆகலின். -

8. பதிற்றுப் பத்து:5-ம் பத்துப்பதிகம்-இத்தொடர், "சோழன் மணக்கிள்ளி மகள் ஈன்ற மகன்' என்று இராமல், சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்' எனத்தெளிவில்லாமல் இருக்கிறது. இதற்குக் கிடந்தாங்குப் பொருள் கொண்டால், மணக்கிள்ளி, செங் குட்டுவன் தாயை ஈன்ற சோழன் என்று பொருள்தாாாது, செங் குட்டுவனை ஈன்றசோழன் மனக்கிள்ளி என, அவன் தங்தை எனப் பொருள்படுதல் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/40&oldid=578814" இலிருந்து மீள்விக்கப்பட்டது