பக்கம்:திருமாவளவன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 திருமாவளவன் .

கூறுதலாலும் புலப்படுகின்றன” என்று கூறுவர் திரு வாளர் மு. இராகவையங்காரவர்கள்."

நெடுங்கிள்ளி அடைத்திருந்த உறையூரை கலங்கிள்ளி முற்றியிருந்தான் எனக் கூறப்படுதலாலும், கிள்ளிவளவ லும் பகைவரை அழித்து உறையூரில் தங்கியுள்ளான் எனக் கூறப்படுதலாலும்’ நலங்கிள்ளியும் கிள்ளிவளவனும் நெடுங்கிள்ளியோடு பகைமைகொண்டிருந்தனர் என்பது தெளியப்பட்டாலும், நெடுங்கிள்ளியைக் கொன்ருேர் இவர் களே என்று துணிவதற்கில்லை. உறையூர் நெடுங்கிள்ளிக் குக் காரியாற்றுத் துஞ்சிய' என்ற அடைமொழியிருப்ப தால், அவன் காரியாற்றில் இறந்தான் என்பது மட்டும் தான் துணியப்படுமே ஒழிய, காரியாற்றில், கலங்கிள்ளி, கிள்ளிவளவனேடு நடத்திய போரில் உயிர்துறந்தான் என்று கொள்வதற்கில்லை. மணிமேகலை கூறும் காரியாற் றுப்போரில், கலங்கிள்ளி, கிள்ளிவளவன் பகைவராகச், சேரனும், பாண்டியனும்தான் குறிப்பிடப்பட்டுள்ளார் களே ஒழிய, நெடுங்கிள்ளி குறிப்பிடப்படவில்லை.*

1. சேரன் செங்குட்டுவன்': பக். 104. 2. புறநானூறு 45. 3. மள்ளர் .

அடுகளி றுயவும் கொடிகொள் பாசறைக் குருதிப் பாப்பிற் கோட்டுமா தொலைச்சிப் புலாக்களம் செய்த கலாஅத் தானேயன் பிறங்குநிலை மாடத்து உறக்தை யோனே.” .

- -புறநானூறு : 69. 4. சிலைக்கயல் நெடுங்கொடி செருவேல் தடக்கை ஆர்புனை தெரியல் இளங்கோன் தன்னல் காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி ”

-1ణfGuaజు : 19 : 124-27.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/42&oldid=578816" இலிருந்து மீள்விக்கப்பட்டது