பக்கம்:திருமாவளவன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்ருேரும் உற்ருேரும் 31 -

முன் காட்டிய பதிற்றுப் பத்துப் பதிகம், சிலப்பதி காரம் முதலிய எடுத்துக்காட்டுக்களான், சோழன் மணக் கிள்ளி, செங்குட்டுவன் தாய் நற்சோணையைப் பெற்றவன் என்பதும், செங்குட்டுவன், தன் மைத்துனன் வளவன் கிள்ளி என்பவைேடு பொருக்காது போரிட்டுவந்த ஒன் பது சோழ அரசர்களை அழித்து அவனே அரியணையில் உறுதியாக கிறுத்தினன் என்று சிலப்பதிகாரமும்,' பதிற். அப் பத்தும்" கூறுவதால் வளவன் கிள்ளி என்ற சோழன் செங்குட்டுவன் மைத்துனன் என்பதும் பெறப்படுமே ஒழிய, மணக்கிள்ளி, கரிகாலன் மகன் என்பதோ, காரி யாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி மணக்கிள்ளியின் மகன் என்பதோ, வளவன் கிள்ளி, நெடுங்கிள்ளியின் மகன் என்பதோ பெறப்படாது. இவ்வளவு எடுத்துக்காட்டுக் களும், செங்குட்டுவனுடைய உறவு முறையை விளக்கத் துணை புரிகின்றனவே ஒழிய, கரிகாலன் குடிவழிப் பட்டியை விளக்கச் சிறிதும் துணை புரியவில்லை. -

இவ்வாறு, செங்குட்டுவல்ை உதவிபுரியப்பட்ட வனே, பிற்காலத்தில் பெருவீாய்ை, இராசசூயம் வேட்ட பெருகற்கிள்ளி எனச் சிறப்பிக்கப்பெற்றவன் எனத் தெரி

1, மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா

ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர் இளவரசு பொருஅர் எவல் கேளார் வளகா டழிக்கும் மாண்பின ராதலின் ஒன்பது குடையும் ஒருபக்ல் ஒழித்து அவன் பொன்புனை கிகிரி ஒருவழிப்படுத்தோய்” ... . . . - -சிலம்பு : 27 :118-23.

2. ஆராச் செருவின் சோழர்குடிக் குரியோர்

ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து '

-பதிற்று :5-ம்பத்து பதிகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/43&oldid=578817" இலிருந்து மீள்விக்கப்பட்டது