பக்கம்:திருமாவளவன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 திருமாவளவன்

கிருன் : இவ்விளஞ்சோழன் பெயர் பெருங்கிள்ளி என் ப்து, சிலப்பதிகாரத்து உரைபெறு கட்டுரையாற் புலப் படும்; இவனைப் பெருநற்கிள்ளி என்பர் அடியார்க்கு நல்லார் ' என்று மேலும் கூறுவர் திருவாளர் மு. இசாக வையங்காரவர்கள். -

செங்குட்டுவல்ை உதவி செய்யப்பெற்றவன் கிள்ளி வளவனே செய்யுளாகவே அது வளவன் கிள்ளி’ என மாற்றிக் கூறப்பட்டுளது என்று கினைக்கும் அளவிலேயே சிலப்பதிகாரத் தொடர் அமைந்திருப்பதாலும், இவனே இராசசூயம் வேட்டவன் என்பதை நாட்டுதற்குரிய சான்று ஒன்றும் காட்டப்பெறவில்லை ஆதலாலும், உரை. பெறு கட்டுரையும், அடியார்க்கு நல்லாரும் குறிப்பிடும் பெருங்கிள்ளி, பெருநற்கிள்ளி' என்பவனைப் பத்தினிப் படிவம் சமைத்து வழிபட்டவன் இவன் என்றுகொள்வ தற்குத்தான் அப்பகுதிகள் (சிலப்பதிகாரப் பகுதிகள்) துணைபுரியுமே தவிர, அவனைச் செங்குட்டுவன் மைத்து னன் என்று கொள்வதற்குத் துணைசெய்யா; ஆதலாலும் இராசசூயம் வேட்ட பெருகற்கிள்ளியின் நண்பர்களுள் ஒரு

வன் என்று ஒளவையாரால் கூறப்பெற்ற" கானப்பேர்

1, 2. சேரன் செங்குட்டுவன் பக்கம் 105, 34. 3. "அதுகேட்டுச் சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எக் திறத்தானும் வாந்தருமிவளோர் பத்தினிக் கடவுளாகுமென்று கிங் கைக்குப் பத்தினிக்கோட்டமும் சமைத்து கித்தல் விழாவணி கிகழ் வித்தோனே.” - , -

4. ' அதனைக்கேட்டுச் சோழநாட்டு உறையூரிடத்தே பெருகற் கிள்ளியாசனகிய வளவன் இவள் பத்தினிக் கடவுளாதலின், எத்தி றத்தானும் சமக்கு அரங்தையைக்கெடுத்து வாந்தருமெனக் கருதி கங் கைக்கு அங்கனம் கோட்டமுமமைத்து நித்தல்விழவும் நடத்தின னென்க. " சிலம்பு : உரைபெறு கட்டுரையும் உரையும்.

5. புறநானூறு : 367.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/44&oldid=578818" இலிருந்து மீள்விக்கப்பட்டது