பக்கம்:திருமாவளவன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 திருமாவளவன்

கிழான் தோயன் மாறன் (புறம்- 180), சோழிய எனுதி (புறம் 894) ஆகிய புரவலர்களும், இவர்களுள், இலவங்கி கைப்பள்ளித் துஞ்சிய கன்மாறனேப் பாடி ய எனய புலவர்களாகிய மதுரைமருதன் இளநாகனரும் (புறம் - 55), நக்கீரனரும் (புறம் - 66) ஆவூர்மூலங்கிழாரும் (புறம் - 196), வடம வண்ணக்கண்பேரிச் சாத்தனரும் (புறம்-198), பிட்டங்கொற்றனைப் பாடிய ஏனைய புலவர் களாகிய, கருவூர்க் கந்தப்பிள்ளை சாத்தனரும் (புறம்-168), வடமவண்ணக்கண் தாமோ காருைம் (புறம்.172) இவர்க ளால் பாடப் பெற்ற பிற புரவலர்களும் கரிகாலனுக்குப் பிற்பட்ட காலத்தவராகவே இருப்பதாலும், அவ்விருவரும் ஒருவரே என்பதோ, கரிகாலன், வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியின் நண்பன் என்பதோ பொருந்தா

எனக் கொள்க.

'பெருஞ்சேரலாதனத் தோற்கடித்த கரிகாலன் முற்பட்டவன்; இமயம்வரை சென்ற கரிகாலன் பிற்பட்ட வன்; சங்கநூல்களில் கரிகாலன் என இருவர் கூறப்ப்ட் டுள்ளனர்" என்று திருவாளர் K. N. சிவராஜப்பிள்ளை யவர்கள் கூறியதாகக்" கொண்டு கூறியதோடு, "இரண்டாம் கரிகாலனைப் பற்றிய பட்டினப்பாலே, பொருநராற்றுப் படை இவற்றின் கடைக்கும், முதற் கரிகாலனைப் பற்றிப் பாடப் பெற்ற புறஅகப் பாடல்களின் நடைக்கும் உள்ள சிறிதளவு வேறுபாடு அணுகி ஆராயத்தக்கது.” என்றும் கூறி, கரிகாலன் இருவர் என்ற தம் கொள்கையை நிலை காட்டுவர் திரு வாளர் மா. இராசமாணிக்கம்பிள்ளை

1. Chronology Of the Early Tamils: P. 91-94. 2. தமிழ்ப் பொழில் துனர் 13. பக்கம்:51. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/54&oldid=578828" இலிருந்து மீள்விக்கப்பட்டது