பக்கம்:திருமாவளவன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

44 திருமாவளவன்

செங்குட்டுவனுக்கு முற்பட்டவன், கரிகாலன் ஆதலாலும், அவன் வடகாடு செல்ல ஏற்ற காலமாக விளங்கியது, புஷ்யமித்ர சுங்காவுக்குப் பிற்பட்ட காலமே (கி. மு. 14827) ஆதலாலும், இக்காலமே, இலங்கைமீது தமிழரசர் படையெடுத்துச் செல்ல ஏற்ற காலம் என்று மகாவம்சம் கூறுவதாலும் இரண்டாம் கரிகாலன் காலம் கி. மு. 60கி. மு. 20-க்கு உட்பட்ட காலமேயாகும்; என்றும் முடிவு செய்வர்.

முதற் கரிகாலனைப் பாடிய பாணரே, இரண்டாம் σή காலன் தந்தை, உருவப்பஃறேர் இளையோனையும் (புறம்-4), இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மகன், செங்குட்டுவனே யும் (புறம்-843, 869, அகம்-212 ; பதிற்றுப்பத்து, 4150) பாடியுள்ளார். திரு. பிள்ளையவர்கள் கொள்கைப்படி கரிகாலன் இருவர் என்று கொள்ளாது ஒருவனுகவே கொண்டு, பரணர் கரிகாலனை, அவன் ஆட்சிக்கால இறுதி யிலும், அதாவது கி. மு. 20-லும், சேரன் செங்குட்டுவனே அவன் ஆட்சித் தொடக்கத்திலும், அதாவது கி. பி. 166அம் பாடியதாகக் கொண்டாலும், அவர் (பரணர்) நூற்றி எண்பத்தாறு ஆண்டுகளுக்குமேல் (கி.மு. 20 + %3.9.166 عے 186) வாழ்ந்தவராகக் கொள்ளுதல்வேண்டும். இம்முடிவு கொள்ளற்பாலதன்று. கரிகாலனுக்கும், செங்குட்டுவ லுக்கும் இடைப்பட்ட காலமே இத்துணைப் பெரியது என்ருல், கரிகாலன் தந்தை உருவப்பஃறேர் இளையோ லுக்கும், செங்குட்டுவனுக்கும் இடைப்பட்ட காலத்தை நோக்கின், பாணர் வாழ்நாள் மேலும் நீளும். கிற்க, திரு. பிள்ளையவர்கள் கொள்கைப்படி, கரிகாலனை இருவராகவே கொண்டு, பரணர், முதற் கரிகாலனை அகப்புறப் பாடல்க ளால் பாடியுள்ளார் என்பதையும் வைத்து நோக்கினல்,

1. தமிழ்ப் பொழில் தினர். 18:பக்கம் 34; 5.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/56&oldid=578830" இலிருந்து மீள்விக்கப்பட்டது