பக்கம்:திருமாவளவன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் பெயர்க்காரணம் 45

அவர் வாழ்நாள், எத்துணை நீளமுடையது என்பதை எண்ணிப் பார்க்கவே இயலாது! (முதற் கரிகாலனுக் கும், இரண்டாம் கரிகாலனுக்கும் இடைப்பட்ட காலம் இவ்வளவு என்பதைத் திரு. பிள்ளையவர்களும் அறிவிக்க வில்லை.) ஆகவே, இரண்டாம் கரிகாலனுக்கும், செங்குட் டுவனுக்கும் வரையறுத்த காலமும் பொருந்தாது. அக் காலம் ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு கரிகாலன் இருவர் என்று கொள்வதும் பொருந்தாது என்க.

இவ்வாறு, அவர் கூறிய காலம் பொருந்தாமையோடு, மேலும் ஒரு அகச்சான்று, கரிகாலன் இருவர் என்ற தன் கொள்கையோடு முரண்படுவதையும் அவர் அறிந்திலர். முதற் கரிகாலனைப் பாராட்டிய பாக்கள் என்று இவரால் கூறப்பெற்ற, மாமூலஞர், பரணர், வெண்ணிக்குயந்தியார் முதலியோரால் பாடப்பெற்ற அகப்புறப் பாடல்களில் எடுத்துக் கூறப்பெற்ற வெண்ணிப் பறந்தலை நிகழ்ச்சி, இவரால் இரண்டாம் கரிகாலனைப் பற்றியது என்று கூறப் பெற்ற பொருநராற்றுப் படையிலும் அப்பாட்டுடைத்தலை வன்செயலாகக் கூறப்பட்டுளது.* பரணர் கரிகாலனைப் பாடினர் என்ருல், அவன் காலத்தில் வாழ்ந்தவர் என்று கொள்ளவேண்டுவது இ ன் று ; கரிகாலனுக்குப் பிற். காலத்தே வாழ்ந்த அவர், இறந்தகால நிகழ்ச்சிகளையே பாடினர் என்று கொள்ளுதல் வேண்டும் என்ருல், பரணர் இரண்டாம் கரிகாலன் தந்தை எனக் கூறப்பெற்ற உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியை எதிர்முகப்படுத்தியே பாடியுள்ளமையானும், இக்கரிகாலனுக்குப் பிற்பட்டோ கிைய செங்குட்டுவனையும் பாடியுள்ளமையானும், அவர், முதற் கரிகாலன் காலத்தில் வாழ்ந்தால்லர் என்பதை இப்புக்கொள்வதாலுைம், இரண்டாம் க்ரிகாலன் காலத்தில்

1. பொருநர் : 148.48 2. புறநானூறு 4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/57&oldid=578831" இலிருந்து மீள்விக்கப்பட்டது