பக்கம்:திருமாவளவன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 திருமாவளவன்

வாழ்ந்தவரே என்பது உறுதி செய்யப்படும். ஆகவே, அவர், அகப் பாடல்களில் குறிப்பிடும், வெண்ணி, வாகை நிகழ்ச்சிகளுக்கு உரியோன் எனக் கூறப்பெற்ற கரிகாலன், அவர் காலத்தில் வாழ்ந்தோனகிய இரண்டாம் கரிகாலன் அல்லன்; அவருக்கும், அவ்விரண்டாம் கரிகாலனுக்கும் முற்பட்டோனுகிய முதற் கரிகாலனே என்று கூறுவது பொருந்தாது; ஆதலாலும், வெண்ணிப்போர் வெற்றி குறித்த அழுந்துளில் ஆர்ப்பு எழுத்தது என்று பரணர் கூறுவதால், பாணரால் அப்பாட்டில் குறிப்பிடப்பெற் ருேன், உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னிக்கும், அழுக் துர் வேள் மகளுக்கும் பிறந்த கரிகாலனே என்பது தெளி வாகிறது; உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியின் மகன், பொருநராற்றுப்படை பெற்ற கரிகாலனே என அப்பாட்டு அறிவிக்கிறது; இவ்வாறு அகப்புறப்பாடல் களில் பாராட்டப்பெற்ற கரிகாலனைப் பெற்றேரும், பட்டினப்பாலே, பொருநராற்றுப்படைகளில் பாராட்டப் பெற்ற கரிகாலனைப் பெற்றேரும் ஒருவரே என்று நன்கு தெளிவாகிறது. ஆதலாலும், பாணர் அம்முதற் கரிகாலன் மீது ஏற்றிக் கூறும் அதே வெண்ணிப் போர், முடத் தாமக் கண்ணியாரால், பாராட்டப்பெற்ற இரண்டாம் கரி காலனுக்கும் ஏற்றிக் கூறப்பட்டுளது ; அது, முன்ஞேர் செயலைப் பின்னுள்ளோர்க்கு ஏற்றிக் கூறும் முறைபோ லன்றி, அப்பாட்டுடைத் தலைவன் செயலாகவே கூறப்பட் டுளது. ஆகவே, அச்செயல் இரண்டாம் கரி கால லுடையதே ஆகும். ஆக, அவன் செயலே முதற்கரிகால லுக்கு ஏற்றிக் கூறுவது இயலாது ; (முன்னுள்ளோர் செயல வேண்டுமானல், அவர் வழி வந்தோர்க்கு ஏற்றிக் கூறுதல் இயலும் ; காலத்தால் பிற்பட்டோர் செயல்

1. அகநானூறு 246. 2. பொருநராற்றுப்படை 130.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/58&oldid=578832" இலிருந்து மீள்விக்கப்பட்டது