பக்கம்:திருமாவளவன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் பெயர்க்காரணம் 47

ஒன்றை, அவருக்கு முற்பட்டோர்க்கு ஏற்றிக் கூறுவது இயலாது) ஆதலாலும், அவ்வகப்புறப் பாடல்களால் பாடப்பெற்ற கரிகாலனும், பொருநராற்றுப்படை, பட்டி னப்பாலைகளால் பாடப்பெற்ற கரிகாலனும் ஒருவரே : வேறுபட்ட இருவரல்லர் என்பது தெளியப்படும்.

கரிகாலன் இருவர் என்ற கொள்கையை வற்புறுத்து வோர், அதை நிலைநாட்டுதற்குரிய அகச்சான்றுகள் இவை என்ருே ; அவ்வாறு கொள்வதால், தமிழகவரலாற்றில் தெளிவாகும் உண்மை இவை என்றே : கரிகாலன் ஒரு வனே என்று கொள்வதால் உண்டாகும் இடர்கிலே இவை என்ருே ஒன்றும் கூறுகின்ருரல்லர்.

செங்குட்டுவன அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்த காலம் பொருந்தாது என்பதே பலர் கொளளும் முடிவு. இலங்கை வரலாற்றைக் கூறும் மகாவம்சம் அளிக் கும் செய்திகள், எத்துணே உண்மை உடையன என்பதே, இன்னும் உறுதி செய்யப்படாமல் இருப்பதாலும், சிலப் பதிகாரம் கூறும் நூற்றுவர் கன்னர், ஆந்திர சதகர்ணி யக்ளுறுநீயே என்பதை உறுதிசெய்ய, பெயர் ஒற்றுமையே சான்ருகாது; மேலும் பல சான்றுகள் தேவை; ஆதலாலும், செங்குட்டுவன் காலம் கி. பி. இரண்டாம் நூற்ருண்டே என்பதை ஒப்புக்கொள்ளாதார் பல ர். இந்நிலையில், இவற்றையெல்லாம் நோக்காது, செங்குட்டுவன் காலத்தை முடிவு செய்துகொண்டு, அதை அடிப்படையாகக் கொண்டு, கரிகாலன் காலத்தையும் முடிவு செய்வது சிறி தம் பொருந்தாது. அத்துடன், இத்தகைய காலகிலே ஒன்றையே அடிப்படை ஆதாரமாகக் கொண்டு, வேறு பிற அகச்சான்றுகள் காட்டாமலே, கரிகாலன் இருவர் என்று முடிவு செய்தல் ஒரு சிறிதும் பொருந்தாது என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/59&oldid=578833" இலிருந்து மீள்விக்கப்பட்டது