பக்கம்:திருமாவளவன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. அரச உரிமை

பண்டைத் தமிழ் வேந்தர்தம் பெருமை எத்துணைச் சிறப்பாகக் கூறப்பட்டாலும், அவர்கள்பால், பொறுமை அழுக்காருமை, ஒற்றுமை முதலிய மக்களுக்கு-அவ ருள்ளும் சிறப்பாக மன்னர்களுக்கு, இருக்கவேண்டிய மாண்புடைப்பண்புகள் இல்லை என்பதையும் கூறுதல் வேண்டும். தமிழகம் தாழ்ந்தமைக்கு அவர்களுடைய இந்தக் குறைபாடுகளே காரணமாம். இந்த உலகம் அனை வர்க்கும் பொது’ என்ற சொல்லே, அரசகுலத்தோர்க்கு அருவருப்பை உண்டாக்குவதாகும் என்ருல், "கென் கடல் வளாகம் பொதுமையின்றி வெண்குடை கிழற்றிய ஒருமையோர்’ என, அக்குறைபாட்டையே பெருமைக் குரியதாகக் கொண்டு புலவர்களும் பாடத்தொடங்கியது, எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆயிற்று. இதனல், சமிழ்நாட்டில் மூவேந்தர் எப்பொ ழுதும் ஒருவரோடொருவர் போர்புரிவது, ஒருவர்காட்டை ஒருவர் அழிப்பது ஆகிய செயல்களை விரும்பி மேற் கொண்டனர். அவ்வளவோடு நில்லாது ஒரு மரபினரே, பல கிளையின ராய்ப் பிரிந்து மாறுபடலாயினர். உடன் பிறந்தார் ஒருவரோடொருவர் மலைந்தனர். மகனும் தந்தையும் மாறுபடலாயினர். இந்தப் பண்பு, தொன்று தொட்டே இருந்துவந்த காரணத்தால் சீரும் சிறப்புமாக வாழ்ந்த தமிழரசு இழந்து, தமிழகம் மாற்ருர் கைப்பட்டுத் தாழ்ந்துவிட்டது. - - -

கரிகாலன் தந்தை, உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி, பெரும்வீரய்ைப் பேர் அரசகுப் வாழ்வதைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/60&oldid=578834" இலிருந்து மீள்விக்கப்பட்டது