பக்கம்:திருமாவளவன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரச உரிமை 51.

றில்லாமையால் அடுத்த அரசன் யார் என்பதை உறுதி செய்யமாட்டாராய், வேற்றரசன் வருகையை எதிர்நோக்கி யிருப்பதல்லது அந்நாட்டுக் குடிகள் வேருென்றும் செய் யார். அரசன் மரபில் வந்த ஆற்றல் மிக்க ஒருவனே, அன்றிப் பிற வேற்றுகாட்டரசன் ஒருவனே தன்முயற்சி யால் அங்காட்டைக் கைப்பற்றி ஆளுவன். இதுவே தமிழ கத்தில் பண்டு நிலவிய அரசியல் முறை. * ..."

பின்னர், ஐம்பெருங்குழு, எண்பேராயம் என அமைப்பு முறை வந்த பிறகு, அரசன் மகப்பேறின்றி மறைந்துவிட்டால் அவன் மரபில் தக்காரைத் தேர்வதோ, அன்றி யானைவழி ஆள்வோரைத்தேர்வதோ அக்குழுவினர் செய்வர். இதுவும் அரசன் மகப்பேறின்றி இறந்துழியே அன்றி, அவன் மகன், ஆளும் பருவம் அற்ற இளைஞன் என்பதற்காகவே அவனை நீக்கிவிட்டுப் பிறரைத் தோர். மாருக அவனேயே அரசனுக்கி அவன் பருவம் எய்தும் வரை அவனுக்காக வேறு சிலர் ஆள்வர். இஃது இடைக் காலத்தில் கண்டமுறை. ஒரோவொருகால் இளைஞனுக்காக ஆட்சிப்பொறுப்பை ஏற்று கடத்துபவனே அன்றிப் பிறரோ, அவனே ஒழித்துவிட்டு அவ்வரசைத் தாமே கைப்பற்றிக் கொள்வது முண்டு. -

கரிகாலன் காலத்தில் ஆளும் குழு என்பது போன்ற ஒன்று இருந்தமைக்குரிய சான்று ஒன்றும் கிடைத்திலது. ஆகவே எதிர்காலத்தில் நாடாளும் பொறுப்புப்பற்றிக் கவலைகொள்வோர் யாரும் இல்லை ஆதலாலும், இளஞ்சேட் சென்னி இறக்கும்போது மகன் பிறக்கவில்லை என்ருலும், அவன் இறந்தவுடனே க்ரிகாலன் - பிறந்துவிட்டான் ஆதலாலும், இளஞ்சேட்சென்னி இறந்துவிட்டமையால் காட்டில் நிலவிய குழப்ப கிலேண்யப்ப்யன்படுத்திக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/63&oldid=578837" இலிருந்து மீள்விக்கப்பட்டது