பக்கம்:திருமாவளவன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 திருமாவளவன்

ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்யத் தொடங்கி விட்டனர் அவன் தாயத்தார் என்பதற்குச் சான்றுகள் பல உள.ஆதலாலும் யானையைக் கொண்டு அரச தேர்வு செய்யவேண்டுவது தேவைஇல்லை. ஆகவே பழமொழிக் கூற்று ஏற்கத்தக்கதல்ல. மேலும், யானை சோழர் தலை நகர்களாகிய புகார், உறையூர் ஆகிய இவற்றில் ஒன்றி னின்றும் விடப்படாமல், கழுமலம் என்ற சோர் நகரி லிருந்தே விடப்பட்டதாகவும், யானை, கரிகாலனை, அச் சேரர் தலைநகர் கருவூரிலிருந்தே எடுத்து வந்ததாகவும் கூறப்பட்டுளது. தாய்த்தார்க்கு அஞ்சிய அவன் தாய், தன் மகனைக் காப்பாற்றத் தலைநகர்விட்டு ஒடினுள் என்ருல், அவள் தன் தாய்வீடாகிய அழுந்துர் செல்வாளேயன்றித் தங்கள் குலப் பகைவர்-சோர் தலைநகர் செல்லான். இவ்வரலாற்றை அளிக்கும் பழமொழிச் செய்யுளில் விழுமியோன்’ என்றுதான் காணப்படுகிறதே ஒழிய, கரிகாலன்பெயரோ அன்றி சோழர்குலத்தான் என்ற குறிப்போ காணப்படவில்லை. யானை தந்தது எனக் கூறும் பழமொழியே வேறு செய்யுட்களால் அவன் பகைவர் கையகப்பட்டுச் சிறைவைக்கப் பட்டான் எனவும், இரும்பிடர்த் தலையார் துணைகொண்டு கரிகாலன் வெளியேறிஞன் எனவும் கூறுகிறது. இவற்றை ஏற்றுக் கொள்வதாயின், யானையைக் கொண்டு கரிகாலனை அரச குக்க முயற்சித்தவர் யார்? அவன் வந்ததும், குழப்பம் விளைத்து, அவனைச் சிறைசெய்த காயத்தார், யானைத் தேர்வின்போது வாளா இருந்தனர் என்பது பொருத்துமா? - காயத்தார் அவனைச் சிறை செய்யும்போது, அவனே யானைத் தேர்வுமூலம் அரசனுக்கியவர் யாது செய்தனர் : அப் பேர்து அவர்கள் வாளா இருந்தனர் எனக் கோட்ல் பொருத்தமா? என்பன போன்ற ஐயங்கள்.பல உண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/64&oldid=578838" இலிருந்து மீள்விக்கப்பட்டது