பக்கம்:திருமாவளவன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரச உரிமை 53

தலும் கூடும். கழுமலமும், கருவூரும் சேரநாட்டு நகரங் கள் ஆகலின், சோழநாட்டரசன் தேர்விற்குக் கழுமலத்தி னின்றும் யானை விடுவதும், அது கருவூரில், அவ்வூர் விழுமியோன் ஒருவனைத் தேர்வதும் வரலாற்று நூலாசிரி யர்கள் ஒப்பாத ஒன்று. அப் பழமொழிப் பாட்டான் குறிப்பிடும் செயல், சேரநாட்டில் நடைபெற்ற அங்காட்டு அரசன் தேர்வு ஒன்றைக் குறிப்பதாகக் கொள்வதல்லது, அதைச் சோழநாட்டு அரசியலோடு தொடர்பு படுத்தல் சி.ட தி, ஆகவே, பழமொழியும், அதன் உரையும் குறிப் பிடும், யானைவழி அரசர் தேர்வு, கரிகாலனைப் பற்றிய கற்பனையே அன்றி உண்மை அன்று என்பதே முடிவு. *:

சின்னுள், பகைவர் சிறையுள், வாழ்ந்த கரிகாலன், அதனின்றும், மீளும் வழிவகைகளை எண்ணித்துணிந்து, தக்கார் துணையையும் பெற்று, ஒருநாள் பகைவருடைய திண்ணிய காவலைத் திடீர் என்று வாள் துணைகொண்டு தாக்கி வெளியேறி விடுதலைபெற்றுத் தனக்குரிய அரச உரிமையைக் கைப்பற்றிக் கொண்டான். கரிகாலன் செய்த, செயற்கரும் இச்செயல் கடியலூர் உருத்திரங் - கண்ணனரால் மிகமிக அழகாகப் பாராட்டப் பெற்றுள்து. 'கூரிய நகத்தினையும், வளைந்த வரிகளையும் உடைய புலிக் குட்டி, கூட்டுள் வளர்ந்தாங்குப் பகைவர் சிறையகத்தே வாழ்ந்து, ஆண்மையும், உானும்பெற்று வளர்ந்து, மேல் செய்யக்கடவ செயல்களை, நுண்ணிதாக எண்ணித் துணிந்து, பெரிய யானை ஒன்று, தன்னைப் பிடிப்பார் வீழ்த்திய பெரிய குழியினின்றும் ஏறுதற்கு, அக் குழியின் கரைகளைத் தன் கூரிய கோட்டாலே குத்தி, அக் குழியைத் துர்த்த, ஏறிக் தன் பிடியோடு சேர்ந்தாற் போல, கரிகாலன் தன் பகைவருடைய திண்ணிய காவலைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/65&oldid=578839" இலிருந்து மீள்விக்கப்பட்டது