பக்கம்:திருமாவளவன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 திருமாவளவன்

பட்ட திசைகளில் ஞாயிறும், திங்களும் காண்ப்படி உம், அவற்றுள் ஒன்று சிறிதுகால எல்லைக்குள் மறைந்து விடுவதைப்போலத் தன்போல் வேந்தன் எறிந்த புறப்புண். நாணி, சேரலாதன் வடக்கிருந்தனன் என்று கழாத் தலையாரும் வென்ற கரிகாலனினும் வடக்கிருந்த சோலா தன் நல்லன் என்று வெண்ணிக்குயத்தியாரும் கூறுவர். இவர்களுள் வெண்ணிக்குயத்தியார், போர்க்களத்திற்கு அண்மையில் வெண்ணிவாயிலில் வாழ்ந்த குயவர்குல மகளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெண்ணிப்போர் கரிகாலன் கன்னிப்போர்; ஆயினும் அதுவே அவன் பெற்ற வெற்றிகளுள் பெரும்வெற்றியாகும். இப்போரின் விளைவாய்த் தமிழ்நாட்டிலுள்ள பகைவர் அனைவரும் பலம் குன்றுவராயினர். வெண்ணியில் கரிகாலன் பெற்ற இவ் வெற்றி குறித்து, அவன் தாய் பிறந்த அழுந்துாரில் வெற்றிவிழாக் கொண்டாடப்பெற்றது என்பர் பரணர். இப்போரின் சிறப்பையும், இதல்ை கரிகாலன் பெற்ற வெற்றிப் பெருமையையும் உணர்ந்த முடத்தாமக்கண்ணி

1. " உவவுத்தலே வந்த பெருகா ளமயத்து இருசுடர்,தம்முள் நோக்கி ஒருசுடர் புன்கண் மாலை மலைமறைக் தாங்குத் தன்போல் வேந்தன் முன்புகுறித்து எறிந்த புறப்புண் காணி மறத்தகை மன்னன் - வாள் வடக்கு இருந்தனன் ' -புறநானூறு : 65. 2. கரிகால்வளவ!

சென்றமர்க் கடந்தகின் ஆற்றல் தோன்ற ைென்ருேய் நின்னினும் கல்லன் அன்ே ற ? கலிகொள் யாணர் வெண்ன்னிப் பறந்தலே. மிகப்புகழ் உலகம் எய்திப் புறப்புண் காணி வடக்கிருந்தோனே” -புறநானூறு 66. 3. அகநானூறு 246. "... ". . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/70&oldid=578844" இலிருந்து மீள்விக்கப்பட்டது