பக்கம்:திருமாவளவன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 திருமாவளவன்

பாழிக்குரியவன் என்பதும், அப்பாழியிற்பெரும்பொருள்

வைத்துப் பேணிவந்தனர் வேளிர் பலர் என்பதும்,

"கன்னன் உதியன் அருங்கடிப் பாழித்

தொன்முதிர் வேளிர் ஒம்பினர் வைத்த - பொன்னிலும் அருமை.”* - என்ற பாட்டாலும், பிறவற்ருனும் துணியப்படும். இப் பாழியைக் கரிகாலன் தந்தை அழித்திருத்தல் கூடும் என் பது," பெற்றேரும், உற்றேரும்” என்ற தலைப்பின்கீழ் விளக்கப்பட்டுளது. நன்னனுக்கும், நார்முடிச் சோலுக் கும், வாகைப் பறந்தலையில் நடைபெற்ற போர் இப்பாழிக் காகவே ஆதலாலும், வாகை, அப்பாழிக்கு அண்மையில் இருப்பதாகவே தெரிவதாலும், வெண்ணிவாயில் போரில் வேளிர் பதிஞெருவர் இவளுேடு போரிட்டுள்ளனர் ஆத லானும், வேளிர் பாழியில் பெரும்பொருள் வைத்துள்ள னேர் ஆதலாலும், வாகைப்பற்ந்தலைப் போர், பீாழி ய்ை இவன் தங்தை அழித்தது காரணமாகவோ, அன்றி, அப் பாழியை இவன் கைப்பற்ற முயற்சித்ததன் காரண மாகவோ, ஒன்பது வேளிர் ஒன்று கூடிக் கரிகாலனை எதிர்த்ததாக இருத்தல் கூடும். பாணர் கூறிய பீடில் மன்னர் ” என்ற ப்குதியில், அம்மன்னர் பிடில்” என்று சிறப்பிக்கப்பட்டுள்ளமையால் அவர்களுள். (அவ்வொன் பது மன்னர்களுள்) சேர, பாண்டியர் போன்ற முடியுடை வேந்தர் இலர் ; குறுநில மன்னர்களே கலந்திருந்தனர் என்ற குறிப்புத் தோன்றுதல் நோக்கத்தக்கது. ... * * - வெண்ணி, வாகை முதலாய இடங்களில் பெற்ற வெற்றியோடு அமையானுய்க் கரிகாலன் தமிழ்நாடெங்கும் தண்டுகொண்டு சென்று ஆங்காங்குள்ள முடியுடைவேங் தர், குறுகிலமன்னர் முதலியோரை வென்று மீண்டான்.

1 அகம்: 258.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/72&oldid=578846" இலிருந்து மீள்விக்கப்பட்டது