பக்கம்:திருமாவளவன்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 திருமாவளவன்

வெற்றிபெற்றும், பின்னர் இருபெரு வேந்தரையும், பதினெரு வேளிரையும் வென்று புறங்கண்டும் முதிர்ந்த அரசியல் அறிவும், போர் நுணுக்கமும் கைவரப் பெற்ற கரிகாலன், தனக்கு அண்மையில் தன்னினும் சிறந்தாாக ஒரு மரபினர் ஆள விட்டுவைத்தான் என்பது, அவன் அறிவை அவமதிப்பதாகும்; அஃது அரசர் பண்பும் -asso.pl. (......it is quite possible that an ambitious Chola monarch made the strength of this arms felt by them. -K. A. Nilakanta sastri; Studies in Chola History And Administration page 38.)

திரையர் என்பவர் தோற்ற அரசர் வரிசையில் இல்லாமை ஒன்றையே கொண்டு, அவர்களை இவன் வென்ருனல்லன் என்றும், மாருக அவர்கள் இவனினும் புகழுடன் இவன் அண்மையிலேயே ஆட்சிபுரிந்துகொண்டு இருந்தனர் என்றும் கூறுவது சிறிதும் பொருந்தாது. ஒளியர், அருவாளர், குடவர், வடவர், தென்னவர், பொதுவர், இருங்கோவேள் என்பாரைப் போலக் காஞ்சியைச் சூழ்ந்த பகுதியில் குறிப்பிடத்தக்க மரபினர் ஆளாமையால், அவர் பெயர், அவன் ஆணைக்கு அடங்கி யோர் வரிசையில் தரப்படவில்லை என்று கொள்வதே நேரிதாம். செந்தமிழ் சேர்ந்த பன்னிரு விலங்களுள்' ஒன்ருகிய அருவாநாடு, காஞ்சியைச் சூழ்ந்த நாடாகும் என்பது அறிஞர் முடிவு. கரிகாலன் ஆணேக்கு அடங்கி யோராகக் கூறப்பட்டோருள் "அருவாளர்” என்போரும் குறிப்பிடப்பட்டுள்ளனர். 'தொல்லருவாளர் தொழில் கேட்ப; இவர்கள் வாழ்ந்த நாடு அருவா நாடாகும். இதல்ை, கரிகாலன் காலத்தில், காஞ்சியைச் சூழ்ந்த நாட்டில் தொண்டையரோ, அல்லது.திரையரோ தோன்ற வில்லை என்பதும், ஆகவே, அப்பகுதி தொண்டைநாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/82&oldid=578856" இலிருந்து மீள்விக்கப்பட்டது