பக்கம்:திருமாவளவன்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சிநாடும் கரிகாலனும் 71.

என்றே, திரையர் நாடு என்ருே பெயர்பெருமல் அருவா நாடு என்ற தன் பழம் பெயரையே பெற்று இருந்தது என்பதும், கரிகாலன் அருவாளரை அடக்கினன் எனவே, காஞ்சியைக் கைப்பற்றின்ை என்பதும் விளங்கும்.

காலத்தால் கரிகாலனுக்குப் பிற்பட்டோன் எனக் கருதப்பட்ட' குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் புறநானூற்றில் பாடிய புலவர் தாயங்கண்ணனுர் ‘தொண்டையர் என்ற இனத்தார் வேங்கடத்தைச்சார்ந்த பகுதிகளே ஆண்டுவந்தனர் ” என அகநானூற்றில் கூறி. யுள்ளார். வேங்கட மலையைச் சார்ந்த இடத்தைத் தன் வாழ்இடமாகக் கொண்டவரும், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியுள்ள காரணத் தால், கரிகாற்பெருவளத்தானுக்குப் பிற்பட்டவரும் ஆய கல்லாடனர், போர்த்தொழில் வல்லோராகத் தொண்டை யரைக் கூறும் குறிப்பு ஒன்றும் குறுந்தொகையுள் காணப் படுகிறது. காலத்தால் பரணருக்குப் பிற்பட்ட காரணத்

1. அக்கிள்ளி வளவனைப் பாடிய புலவர் அனைவரும், கரிகால னுக்குப் பிற்பட்டாரையே பாடியிருப்பதும், இக்கிள்ளி வளவனே, மணிமேகலை கூறும் கிள்ளிவளவன் என்பதும், இவனைக் கரிகாலன் மகன் வயிற்றுப் போன் என்று திருவாளர் மு. இராகவையங்காாவர் கள் கூறுவதும், (சோன் செங்குட்டுவன்' பக்கம். 108) நினைவில் வைக்கற் பாலன.

2. புறநானூறு : 397. . 3. வினைாவில் யானை விறற்போர்த் தொண்டையர் இனமழை தவழும் எற்றரு நெடுங்கோட்டு ஒங்குவெள் ளருவி வேங்கடம்.” -அகம்: 213. 4. வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென

ஈங்குவந் திறுத்தவென் னிரும்பே ரொக்கல்."-புறம் 391. 5. பொருவார், மண்ணெடுத் துண்னு மண்னல் யானை

வண்டேர்த் தொண்டையர்.” -குறுந்தொகை.; 260.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/83&oldid=578857" இலிருந்து மீள்விக்கப்பட்டது