பக்கம்:திருமாவளவன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சிநாடும் கரிகாலனும் s 73

தக்கது. நக்கீரர் இப்பாட்டில் திரையனக் குறிப்பிடுங்கால், ' செல்லா நல்லிசைப் பொலமயூட் டிரையன் ’ எனச் சிறப்பாகவே கூறியிருப்பதாலும், இளந்திரையன் தந்தை என மணிமேகலை கூறும் கிள்ளிவளவனையும் பாடியிருப்ப தாலும் நக்கீரர் குறிப்பிடும் இத்திரையன், பெரும் பாணுற்றுப்படை கூறும் திசையனே என்று ஐயங் கொள்ளவும் கூடும்.

இவ்வாறு, கரிகாலன் காலத்திற்குப்பின், தொண்டை யர் என்ற மரபினரும், தொண்டைமான் என்ற அம்மரபு அரசன் ஒருவனும், திரையனும் இருந்தனராக அறிவ தன்றி, அவன். காலத்திற்குமுன் இருந்தனராகக் காட்டக் கூடிய சான் அறுகள் ஒன்றும் கிடைத்தில, வடவர் வாட’ என்ற தொடரோடு, வட நா ட் டு வெற்றிவிளக்கம், சிலப்பதிகாரத்து அளிக்கப்பட்டிருப்பவும், பின்சான்று ஏற்கத்தக்கதல்ல என்று கழித்துவிட்டு முன்னது ஒன்றையே கொண்டு கரிகாலன் வடநாடு சென்ருன் என் பதை ஒப்புக்கொள்ள முடியாது ; பழஞ்சான்று பல மேலும் தேவை எனக் கூறும் இவர், திரையர் என்பார், கரி காலனுக்குமுன் தொண்டைநாட்டில் இருந்தனர் என்பதற் குரிய சான்று ஒன்றும் காட்டாது, அவர்கள் இருந்தன ரா என்பதை அறிவதற்கும் முயலாது, அவர்கள் இருந்தனமாக எண்ணிக்கொண்டு, அவர்கள் பெயர், தோற்ற அரசர் பட்டியில் இல்லாமை ஒன்றையே கொண்டு, காஞ்சி கரிகாலன் ஆட்சிக்குட்படாது, தனிப்பேர் அரசின்கீழ் இருந்தது என்று கூறுவது சிறிதும் பொருந்தாது ; கிற்க. காஞ்சியும், வடகாடும் கரிகாலன் படை ஆற்றலை. உணர்ந்துள்ளன என்பதற்கு இத்துணைச் சான்றுகள் இருப்பவும், அவற்றை எல்லாம் நோக்காது, ' காஞ்சி தனித்திருந்தது' எனப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/85&oldid=578859" இலிருந்து மீள்விக்கப்பட்டது