பக்கம்:திருமாவளவன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 திருமாவளவன்

யார் கூறுவதற்கும், கரிகாலன் இளமைக்காலத்தில், திரையன் காஞ்சியைக் கைப்பற்றிக்கொண்டான்” எனத் திரு. கனகசபை அவர்களும், கரிகாலன் காஞ்சியை வென்று அதன் ஆட்சிப்பொறுப்பைத் திரையன்பால் ஒப்புவித்தான்” எனத் திரு. P. T. சீனிவாச அய்யங்கா ரவர்களும், அமைதி கூறுவதற்கும் காரணமாய் விளங்கு வது, பட்டினப்பாலே பாடிக் கரிகாலனைப் பாராட்டிய கடியலூர் உருத்திரங்கண்ணனரே பெரும்பானற்றுப் படை பாடி, இளந்திரையனையும் பாராட்டி இருப்பதே ஆகும். இருவரையும், ஒரே புலவர் பாடியுள்ளார் ; ஆகவே, இருவரும் சமகால அரசராவர் ; இருவரும் பெருமை யாகவே பாராட்டப் பெற்றுள்ளனர் ; ஆகவே, இருவரும் ஒருவருக்கொருவர் அடங்காது அரசாண்ட பேர் அரசர்க ளவர் ; ஆகவே, கரிகாலன் காஞ்சியை வென்றிருக்க முடியாது ; காஞ்சியைக் கடக்கவில்லை எனவே, அவன் வடகாடு சென்றிருக்கவும் முடியாது ; இதுவே சாஸ்திரியா

வர்கள் வாதமாகும். -

பாணர் பாராட்டிய அரசர்களுள், சோழன் உருவப்பஃ. றேர் இளஞ்சேட் சென்னி, கரிகாலன், வேற்பஃறடக்கை பெருநற் கிள்ளி, குடக்கோ நெடுஞ்சேரலாதன், கடல் பிறக்கோட்டிய வேல்கெழுகுட்டுவன் மு. த லியோர் சிறந்தோராவர். இவருள், உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி கரிகாலன் தந்தை ஆவன் ; கடல் பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன், கரிகாலனுக்குப் பிற்பட்டோகிைய, திருவாளர் மு. இராகவையங்காரவர்களால் கரிகாலன் மகன் எனக் கருதப்பட்டோனுகிய, மணக்கிள்ளியின் மகள் வயிற்றுப் பிறந்தோனவன். ஆகவே, இவர்களைத் தலைமுறையாக வரிசைப்படுத்தில்ை, உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி, அவன் மகன் கரிகாலன், அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/86&oldid=578860" இலிருந்து மீள்விக்கப்பட்டது