பக்கம்:திருமாவளவன்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சிநாடும் கரிகாலனும் ,疗5

மகன் மணக்கிள்ளி, அவன் மகள் நற்சோணே, அவள் மகன் செங்குட்டுவன் என ஐந்து தலைமுறையினராகக் காணலாம். ப ண ர், உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியையும் பாடிச், செங்குட்டுவனையும் பாடினர் என் முல், அவர் ஐந்து தலைமுறைக்கு மேலும் வாழ்ந்தவராவர் என்று பெறப்படும். ஐந்து தலைமுறை அரசர்களையும் ஒரே புலவர் பாட முடிந்தது என்பதைக் காணும்போது, ஒரே புலவர் இருவரைப் பாடினர் என்ற ஒன்றையே கொண்டு, இருவரையும் வேறு வேறு காலத்தவராகக் கொள்ளாது சமகாலத்தவராகக் கொள்வது ஏனே? முன்னும் பின்னுமாக வாழ்ந்த அரசர்களே ஆவர் கரிகால னும் இளந்திரையனும் என்று கொள்வதில் இழுக்கு ஒன் அறம் இன்று.

கரிகாலனுக்குப் பிற்பட்ட காலத்தே தொண்டை யோரும், தொண்டைமானும், திரையனும் இருக்தனர் என்பதற்குச் சான்றுகள் கிடைப்பதைப்போல அவனுக்கு முன் இருந்தனராகக் காட்டக்கூடிய சான்று ஒன்றும் கிடைக்காமையாலும், கரிகாலன் பகையரசர் வரிசையில் திரையர் இடம்பெருமையானும், காஞ்சியைச் சூழ்ந்த சில மாகிய அருவாநாட்டார் இடம்பெற்றுள்ளமையாலும், கரி காலன் வடநாடுவரை சென்ருன் என்பதற்குச் சான்றுகள் பல உண்மையானும், கரிகாலனைப் பாடிப் பதினறு நூருயிரம் பொன்பரிசுபெற்ற புலவரே பேர் அரசனுகவிளங் கும், தனக்குப் பரிசு அளித்த கரிகாலன் கண்முன்னரே அவ லுக்கு அண்மையில் வாழ்ந்த திரையனே, அவனினும் மேம் பட்டோன் என்று பாடினர் என்பது புலவர்ப் பண்பிற்கே இழுக்காம் ஆதலாலும், அன்றித், திரையனை முன்னர்ப் பாடிக் கரிகாலனைப் பின்னர்ப் பாடிஞர் என்ருல், தன்னி லும் மிக்கோனக ஒருவனப் பாடிய வாயால், தன்னையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/87&oldid=578861" இலிருந்து மீள்விக்கப்பட்டது