பக்கம்:திருமாவளவன்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*76 திருமாவளவன்

பாடிய புலவன் ஒருவனுக்குப் பரிசாகப் பெருக்தொகை யளிக்கும் சிறுமதியுடையானல்லன் கரிகாலன்’ ஆகலா அனும், கரிகாலன் காலத்தில் கொண்டையரோ, திரையனே இல்லை எனவும், அவனுக்குப் பின்னரே தோன்றினர் என வும், உருத்திரங்கண்ணனர், கரிகாலனைப்பாடி அவனுக் குப் பின்னும் உயிர் வாழ்ந்து, அவனுக்குப்பின் காஞ்சியை ஆண்ட இளந்திரையனையும் பாடினர் எனவும் கொள்வதே பொருத்தமும், மேற்கூறிய தடைகளைப்போக்கும் வழியு மாகும். டாக்டர் S. கிருஷ்ணசாமி அய்யங்காவர்களும் இளந்திரையனக் கரிகாலன் பேரனுகக்கொண்டு ' புலவர் உருத்திரங்கண்ணனுர், மறுதலைமுறைவரை வாழ்ந்து, வேறு ஒரு புரவலன் காஞ்சித் தொண்டைமான் இளந்திரை யனைப் பாடும்பேறு பெற்றிருந்தார் ' என்று இதே கொள்கையை வலியுறுத்துவர்.

கரிகாலன் காலத்தில் காஞ்சியில் திரையர் வாழ்ந் தனா இல்லையா? வாழ்ந்திருப்பின் கரிகாலன் அவர் களே வென்முளு இல்லையா? என்பதுதான் இங்கு ஆசாயப்படுவது. ஆகவே, அவ்ர்க்கும் சோழர்க்கும் உள்ள உறவுமுறை பற்றிய கருத்து மாறுபாடுகளோ அல்லது அவர்கள் வர்லாறு பற்றி நச்சிஞர்க்கினியர் கூற் றிற்கும் மணிமேகலைப் பகுதிக்கும் உள்ள முரண்பாடு பற்றியோ இங்குக் கவலைகொள்வது வேண்டுவதில்லை.

1. பகைவன் நலங்கிள்ளியிடமிருந்து தன்னுார்ப்புக்கான் என் பதற்காகவே இளக்கத்தன் என்ற புலவனை ஒற்றன் எனக்கருதிக் கொல்லப்புகுந்தான், நெடுங்கிள்ளி (புறம். 47) என்ற செய்தி அாசர் பண்பு எத்தகையது என்பதை விளக்குவது காண்க.

2 மணிமேகலையும், கரிகாலன் காலத்துக்குப் பிறகே திரை யர் தோற்றத்தைக் கூறுவதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. -

3. Ancient India P. 94. . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/88&oldid=578862" இலிருந்து மீள்விக்கப்பட்டது