பக்கம்:திருமாவளவன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சிநாடும் கரிகாலனும் 77

பேராசிரியர் நீலகண்டசாஸ்திரியார் அவர்கள் கொள்கைப்படி கரிகாலனுக்கு ஆயிரம் ஆண்டுகள் பிற் பட்டவரும், வரலாற்றேடு ஒரு சிறிதும் ஒத்து வாராத பல செய்திகளை மூலப்பகுதியில் அவை பற்றிய குறிப்பே இல் லாதபோயினும் தாம் எழுதும் உரைப்பகுதியில் எவ் வாறேனும் புகுத்திவிடும் இயல்பினரும் ஆகிய நச்சினர்க் கினியர் கூறும் 'கரிகாலன் தாய் அழுந்துர்வேள்மகள்’ என்ற செய்தியை ஏற்றுக்கொள்ளும் இவர், கரிகாலனுக்கு அரை நாற்ருண்டே பிற்பட்டவரும், காம் எழுதப் புகுந்த இலக்கியமாபிற்கும் காலநிலைமைக்கும் ஏற்ப உண்மை வரலாற்று நிகழ்ச்சிகளோடு சில புனைந்துரைகளையும், அவ் வரலாற்று நிகழ்ச்சிக்கு ஒரு சிறிதும் முரண்படாவகையில் கூட்டிக்கூறும் இயல்பினரும் ஆகிய இளங்கோவடிகள் எழுத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது வியப்பே. .

கி. பி. ஏழாம் நூற்ருண்டின் தொடக்கத்தில் வாழ்ந் தோராகிய திருஞானசம்பந்தர், கரிகாலனைக் காஞ்சி ஏகம்ப வாணனைப் பரவிய பாக்களுள் வைத்துப் பாடியுள்ளமை யால், கரிகாலன் காஞ்சியோடு தொடர்புடையனவன் என்பது மேலும் உறுதியாதல் காண்க."

“ இருகில் மருங்கிற் பொருர்ைப் பெரு அச், செரு வெங் காதலிற் றிரும்ா வளவன்...புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள் ” சென்ருன் கரிகாலன் எனத் தெளிவாகக் கூறியதோடு

எனப் போரை விரும்பியே வடநாடு

"வச்சிர தன்ட்ைடுக் கோன் இறை(யாகக்) கொடுத்த கொற்

1. விண்ணுளார் மறைகள் வேதம் விரித்தோதுவார். * : * கண்ணுளார் சுழலின் வெல்வார் கரிகாலனே

நண்னுவார். எழில்கொள் கச்சிக்கர் எகம்பத்து அண்ணலார் ஆடு கின்ற அலங்காரமே” -2-ம் திருமுறை : 12: திருக்கச்சின்கம்பரம் :1-வது பர்டல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/89&oldid=578863" இலிருந்து மீள்விக்கப்பட்டது