பக்கம்:திருமாவளவன்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 திருமாவளவன்

றங்பந்தரும்” எனவும், மகதான் னுட்டு வாள்வாய் வேந்தன் பகைப்புற்த்துக் கொடுத்த பட்டி மண்டபமும்' எனவும் அவர்களை வென்று அவர்கள் இறையாகத் தந்தவற்றைப் பெற்று மீண்டான் எனச் சிலப்பதிகாரம் கூறுவதால், * கரிகாலன் வடநாட்டாசரோடு நட்புப்பூண்டு அவர்கள் அளித்த பரிசுப்பொருள்களைப் பெற்ருனே ஒழிய வட நாட்டில் போர்புரிந்து வெற்றிபெற்ருன் என்று கொள்வ. தற்கில்லை” எனத் திரு. கனகசபை அவர்களும் பிறரும் கூறியது பொருந்தாது.

' வச்சிாநாடு என்பது சோணை (Son) நதிசூழ்ந்த தேசமாகும். அதனை அடுத்துள்ளதே மகத நாடு. இது கங்கையடுத்த பிரதேசமென்பது தெரிந்ததே. அவ்விரு நாட்டரசரையும் வென்றபின்பே அவந்திவேந்தனிடம் நட்பு முறையில் அவ்வளவன் சென்றவன் என்று இளங் கோவடிகள் குறிப்பிடுகிருர். இவற்ருல் வச்சிர மகத நாடு களே அடுத்து அவற்றின் வடபக்கத்திலுள்ள இமயப் பகுதியே சோழன் தன் அடையாளத்தை நாட்டிய இட மென்பது நன்கு விளங்கும்.

“இவ்வாறு இமயப் படையெடுப்பு, சோழன் தலைமை யின்கீழ்த் தமிழாசால் ஒரு காலத்து நிகழ்ந்தது என்ற வரலாற்றைப் புதியதாகத் தெரியவரும் அரியசெய்தி யொன்றும் ஆதரித்து நிற்பதை இனிக்கூறுவேன். மேலே நான் கூறியவற்றையெல்லாம் ஒருசோக்கொண்டு நோக்கு மிடத்து, திருமாவளவன் சென்றுவந்த இமயமலை இப் போது வலிக்கிம், புட்டான் என்ற இராஜ்யங்களுக்கு இடை யிலுள்ள மலைப்பகுதியேயாதல் வேண்டும். என்னெனில், இப்பகுதியிற்ருன் வங்காளத்துள்ள டார்ஜீலிங்கிலிருந்து திபெத்துக்குச் செல்லும் கணவாய்கள் உள்ளன. இக்கண வாய்களிற் சில முற்காலத்தும் இக்காலத்தும் வியாபாரப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/90&oldid=578864" இலிருந்து மீள்விக்கப்பட்டது